TN Minister Ma Subramanian (PC: Facebook, Pixabay)

டிசம்பர் 28, சைதாப்பேட்டை: மக்களிடையே மீண்டும் பரவியுள்ள கொரோனா (Coronavirus Variant BF7) அச்சத்தால் கவலைகொள்ள வேண்டாம். அனைவரும் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் வைத்து கேட்டுக்கொண்டார்.

சென்னை சைதாப்பேட்டையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு மக்கள் மருத்துவம் & சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் (Minister Ma. Subramanian), "நேற்று சீனாவில் இருந்து 36 வயதுடைய பெண், 2 பெண் குழந்தைகள் சீனாவில் இருந்து தென்கொரியா-இலங்கை வழியே மதுரை வந்துள்ளார்கள். சுகாதாரத்துறையினர் கொரியா, ஜப்பான், இலங்கை, சீனா வழியே வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த தமிழ்நாடு முதல்வரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில் நடந்த கொரோனா பரிசோதனையில் 36 வயது பெண் மற்றும் 1 குழந்தைக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இவர்களை 36 வயது பெண்ணின் சகோதரர் சொந்த காரில் அழைத்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு சென்றுள்ளார். கொரோனா உறுதியான காரணத்தால் வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. Couple Suicide With Children: 2 பெண் குழந்தையை கொன்று தம்பதி தற்கொலை; கடிதத்தில் பேரதிர்ச்சி பின்னணி.. இளவயது சர்க்கரை நோயால் விபரீதம்..! 

மாவட்ட சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சுகாதார ஆய்வாளாரால் கண்டறியப்பட்டுள்ளார். 36 வயது பெண்ணின் சகோதரர் சென்னைக்கு காரில் வரவே, அவரையும் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 பேரின் இரத்த மாதிரிகள் சென்னை ஆய்வகத்தில் சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. ஆய்வு முடிவுகள் வரும் வரையில் எவ்வகை கொரோனா என உறுதியாக கூற இயலாது.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி விமான நிலையங்கள் தமிழகத்தில் பன்னாட்டு விமான நிலையங்கள் என்பதால், அவற்றில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இன்று மதியம் 2 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடும் மக்கள் யாவரும் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளி போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.

தற்போது பரவிவரும் உருமாறிய BF7 ரக கொரோனா வேகமாக பரவும் வைரஸ் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். நமது சிறு அலட்சியமும் பெரும் பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்பதால், மக்கள் எக்காரணம் கொண்டும் அலட்சியமாக இருக்க கூடாது. மக்கள் அதிகளவில் கூடும் கோவில் திருவிழாக்கள், புத்தாண்டு கொண்டாட்டங்கள், திரையரங்குகள், பேருந்து பயணம், இரயில் பயணம், நெரிசல் மிகுந்த இடங்களில் முகக்கவசம் அணிவது சாலச்சிறந்தது" என்று தெரிவித்தார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 28, 2022 10:22 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).