TN CM MK Stalin Condolence (Credit: Twitter)

டிசம்பர் 30, குஜராத்: பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தனது இரங்கலை (Tamilnadu CM Mourning Heeraben Modi Passes Away) தெரிவித்து இருக்கிறார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார், குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகரில் இளையமகன் பங்கஜ் மோடியுடன் ஹீராபென் மோடி வசித்து வந்தார். அவருக்கு 100 வயது ஆகிறது. கடந்த ஜூன் மாதத்தில் தனது 100வது பிறந்தநாளை கொண்டாடினார்.

கடந்த 28ம் தேதி ஹீராபென் மோடிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே, அவர் சிகிச்சைக்காக அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அவர் விரைந்து நலம்பெற வேண்டி பலரும் பிரார்த்தனை செய்தனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை வயது மூப்பு மற்றும் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி உருக்கமான தகவலுடன் பதிவு செய்திருந்தார். #Heeraben Modi: பிரதமர் மோடியின் தாயார் 100 வயதில் காலமானார்; சோகத்தில் பாஜகவினர், மாநில முதல்வர்கள் இரங்கல்..! 

அதனைத்தொடர்ந்து, அவர் இன்று மேற்கு வங்கம் மாநிலத்தில் வந்தே பாரத் இரயில் திட்ட தொடக்கம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக இருந்தது. அவற்றில் காணொளி வாயிலாக பங்கேற்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

ஹீராபென் மறைவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பலரும், மாநில முதல்வர்களும் அடுத்தடுத்து தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினும் (MK Stalin, Tamilnadu State Chief Minister) தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில், "அன்புடைய பிரதமர் மோடி., உங்களின் அன்புக்குரிய தாயார் ஹீராபாவுடன் நீங்கள் கொண்ட உணர்ச்சிபூர்வ பிணைப்பை நாங்கள் அறிவோம். தாயை இழந்த துயரம் என்பது யாராலும் தாங்க இயலாத ஒன்று. நான் உங்களின் இழப்புங்க எவ்வுளவு வருந்துகிறேன் என்பதை வார்த்தையால் விவரித்து கூற இயலாது. இந்நேரத்தில் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இதயபூர்வ இரங்கலையும் தெரிவிக்கிறேன். உங்களது தாயாருடன் நீங்கள் பகிர்ந்துகொண்ட நினைவில் நீங்கள் அமைதி, ஆறுதலை பெறுவீர்கள்" என்று தெரிவித்து இருக்கிறார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 30, 2022 09:02 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).