File Image: Tamilnadu Former Chief Minister Selvi. J.Jayalalitha

டிசம்பர் 7, சென்னை: கர்நாடகா மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டம், பாண்டவபுரா மேல்கோட்டை ஊரில் ஜெயராம் - வேதவல்லி தம்பதிகளுக்கு மகளாக 24 பிப்ரவரி 1948 அன்று பிறந்தவர் கோமளவல்லி என்ற ஜெயலலிதா (J Jayalalithaa). தனது இளம் வயதில் திரைத்துறைக்கு அறிமுகமான ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் அழைப்பின் பேரில் அதிமுகவுக்குள் (AIADMK) அறிமுகமாகி தமிழ்நாட்டு மக்களால் மறக்க இயலாத இடத்தை பெற்று முதல்வராகினார்.

இவர் நம்மைவிட்டு மறைந்து இருந்தாலும், அவரின் நினைவுகள் மறைக்க இயலாதவை. அவரின் ஆட்சிக்காலத்தில் இரும்பு பெண்மணியாகவும் மக்களால் அறியப்பட்டார். அவரின் இறப்பு தொடர்பான மர்மம் பலவகையில் நீடித்து, பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது. அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த விஷயங்களில் அறியப்படாத சில உண்மை தொகுப்புகள் குறித்த தகவலை இன்று தெரிந்துகொள்ளலாம்.

நடிப்பு & படிப்பு: தமிழ் திரையுலகில் தாயின் வற்புறுத்தலால் களமிறக்கப்பட்ட ஜெயலலிதா, தனது 15 வயதில் பருவமடையும் முன்பே திரைக்கு பரிட்சயமானார். அவர் நடித்த முதல் படத்தில் அருவியில் ஸ்லீவ்லஸ் உடை அணிந்து குளித்த காட்சிகள் இடம்பெற்று, அது 18 வயது மேற்பட்டோருக்கான படமாக அறிவிக்கப்பட்டது. அதனால் ஜெயலலிதாவால் தனது முதல் படத்தை திரையில் கண்டுகளிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நடிப்பதில் ஒருபுறம் கவனம் இருந்தாலும், படிப்பில் மாநில அளவில் அவரே தலைசிறந்த மாணவியாக இருந்தார். Anemia: இரத்த சோகை பிரச்சனை ஏற்படுவது எதனால்?.. காரணங்கள் என்ன?.. இன்றே தெரிந்துகொள்ளுங்கள்.! 

ரூ.1 சம்பளம் பெற்ற முதல்வர்: தனக்கான வருமான ஆதாரங்கள் என்பது அதிகளவில் இருக்கிறது. அங்கையால் எனக்கு சம்பளம் தேவையில்லை என்று முதல்வர் சம்பளத்தை ஒதுக்கியவர் இந்திய அளவில் இவரே ஆவார். ஆனால், அவர் கட்டாயம் சம்பளம் பெற வேண்டும் என்ற நிபந்தனையால் ரூ.1 சம்பளமாக பெற்றுக்கொண்டார்.

கற்பதில் காதலி: நடிப்பு, அரசியல் என எப்பாதை சென்றாலும் தான் கற்பிக்கும் குணத்தில் எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் கவனித்துக்கொண்டு ஜெயலலிதா, பல மொழிகளையும் கற்றுக்கொண்டார்.

கர்ஜனையில் சிங்கம்: தமிழகத்தின் இரும்பு பெண், புரட்சி தலைவி என்று ஒவ்வொருவராலும் போற்றப்பட்ட ஜெயலலிதா தனது தைரியத்தால் பல விஷயங்களில் அரசியல் மட்டத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிர்கொண்டு வெற்றி அடைந்தவர். அவரின் ஆட்சிக்காலத்தில் அதிமுக இயக்கம் எப்படி இருந்தது என்பதே அதற்கு சாட்சி.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 7,2022 10:23 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).