டிசம்பர் 7, சென்னை: நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை கிராமத்தில் 1924 ஜூன் 3ல் முத்துவேல் - அஞ்சுகம் அம்மையார் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் மு. கருணாநிதி (M Karunanidhi). இவரை அரசியல் சாணக்கியன் என்றும் அழைக்கலாம். திருவாரூரில் பிறந்து இளம்வயதிலேயே தமிழ் இலக்கியம், கலைப்படைப்புகளில் ஈடுபாடு கொண்டு எழுத்தாளராக இருந்த கருணாநிதி, எம்.ஆர் ராதாவால் கலைஞர் கருணாநிதி என்று அழைக்கப்பட்டார். அன்றில் இருந்து அவர் கலைஞர் கருணாநிதி என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
அன்றைய நீதிக்கட்சியின் பேச்சாளர் அழகிரிசாமி அவர்களின் பேச்சினால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 15 வயதில் இருந்து பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார். அவர் தமிழ்நாட்டினை பலமுறை முதல்வராக ஆட்சி செய்துள்ளார். தமிழகத்தின் நிலையை உயர்த்த முற்காலங்களில் அரும்பாடுபட்ட தலைவர்களில் கலைஞர் தவிர்க்க முடியாத இடத்தை என்றுமே பெற்றிருப்பார். அவர் குறித்து நாம் தெரிந்துகொள்ளாத பல விஷயங்கள் குறித்து இன்று காணலாம்.
தக்ஷிணா மூர்த்தி என்ற இயற்பெயரை கொண்ட கலைஞர் கருணாநிதி, தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 12 முறை மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 10, 1969 அன்று அவர் முதன் முறையாக தமிழ்நாடு முதல்வராக பதவியேற்றார். கடந்த 1952 ல் கருணாநிதியின் வசனங்களில் வெளியாகிய பராசக்தி திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் புயலாக பேசப்பட்டது என்பதும் மறுக்க இயலாது.
தோல்வியே இல்லை: கருணாநிதியாக தேர்தலை சந்தித்தபோது தொடங்கிய வெற்றி அவருக்கு இறுதிவரை அப்படியே நிலைத்தது என்பதை உறுதி செய்யும் பொருட்டு, அவர் சந்தித்த அனைத்து தேர்தலிலும் வெற்றியடைந்தார். Baby Carrying: அடம் பிடிக்கும் குழந்தைகளை அமைதிப்படுத்துவது எப்படி?.. குட்டீஸ்களை கட்டுப்படுத்த அசத்தல் டிப்ஸ்.!
சுதந்திர தாகம்: குடியரசுத்தலைவர், ஆளுநர் போன்றோர் மட்டுமே தேசியக்கொடியேற்றும் வழக்கம் இருந்த காலத்தில், தேசம் மீது கொண்ட பற்றால் தேசியக்கொடியேற்றி பதவியேற்ற இந்திய அளவிலான முதல்வர்களின் முதல் அவர் கலைஞர் கருணாநிதி மட்டும்தான்.
இளம்வயதிலேயே நாயகன்: தனது சிறுவயதிலேயே தமிழ் மொழியின் இலக்கியம் மீது தீரா காதல் கொண்ட கலைஞர், 14 வயதிலேயே முரசொலி பத்திரிகையை தொடங்க அடித்தளமிடும் வகையில் மாணவர் சங்கத்தை ஏற்படுத்தி பலருக்கும் தமிழ் ஆர்வத்தை ஊட்டிவளர்த்திட்டார்.
முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர்: 13 முறைகள் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி, மொத்தமாக 5 முறை தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்று மக்களுக்காக பணியாற்றி இருக்கிறார். அவரின் அரசியல் வியூகம் யாரும் எதிர்பாராத வகையில் இருக்கும் என்பதால், தென்னிந்திய அரசியல் சாணக்கியன் என்றும் அழைக்கப்பட்டார்.
நெஞ்சுக்கு நீதி: தனது வாழ்க்கை வரலாற்றினை அனைவரும் தெரிந்துகொள்ளும் பொருட்டு தினமணி கதிர், முரசொலி, குங்குமம் ஆகிய நாளிதழ்களில் வாழ்க்கைக்குறிப்பை நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் புதுப்பித்து கலைஞர் கருணாநிதி வெளியிட்டு இருக்கிறார்.