டிசம்பர் 7, சென்னை: இலங்கையில் உள்ள கண்டி, நாவலப்பிட்டியில் கடந்த ஜனவரி 17, 1917ல் வழக்கறிஞர் கோபாலன் மேனன் - சத்யபாமா தம்பதிக்கு 5ம் மகனாக பிறந்தவர் எம்.ஜி. இராமச்சந்திரன் @ மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் (MG Ramachandran @ Maruthur Gobalan Ramachandran). இவர் இலங்கையில் இருந்து கேரளாவுக்கு சென்று, அங்கிருந்து தனது சகோதரர் சக்கரபாணியின் உதவியுடன் நாடக கலைகளை கற்றுக்கொண்டு திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார்.
திரையில் இவரின் நடிப்புக்கென ரசிகர்கள் உருவானதை தொடர்ந்து, அண்ணாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு திமுகவில் தன்னை இணைத்து அரசியல் பயணத்தை தொடங்கினார். அரசியல் பணத்தில் கருணாநிதியுடன் நெருங்கிய நண்பராக இருந்த எம்.ஜி.ஆர்., அண்ணாவின் மறைவுக்கு பின்னர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அண்ணாவின் கொள்கையால் அரசியலுக்கு வந்ததை நினைத்து பார்த்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை உருவாக்கினார்.
புதிய கட்சியின் தொடக்கத்திற்கு பின்னர் திமுக - அதிமுகவை இணைக்க பலபேச்சுவார்த்தைகள் நடந்தாலும், எம்.ஜி.ஆர் முதல்வரான பின்பும் அது தொடர்ந்து நடைபெற்று வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மக்களால் அன்புடன் புரட்சித்தலைவர், மக்கள் திலகம், இதயக்கனி, இதயதெய்வம், வாத்தியார் என்று பண்பெயர்களால் போற்றப்பட்ட எம்.ஜி.ஆர் குறித்து பலரும் அறியாத விஷயங்கள் நிறைந்து கிடக்கிறது.
கருணாநிதியுடன் அன்பு-மரியாதை: அரசியலில் இருபெரும் துருவங்களாக உருவெடுத்த கருணாநிதி - எம்.ஜி.ஆர் இடையே அரசியல் கருத்து மோதல்கள் இருந்தாலும், இருவரும் தீவிர நண்பர்களாகவே இருந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அவ்வப்போது சந்திக்கும் சூழ்நிலை அமைந்தால், முதலில் எம்.ஜி.ஆர் கருணாநிதியை நலம் விசாரிப்பதையே வழக்கமாக வைத்துள்ளார். மேலும், கருணாநிதியின் பெயரை கட்சிக்காரர்கள் பெயர்சொல்லி அழைப்பதை அவர் விரும்பியதும் இல்லை. Grand Theft Auto: அட்டகாசமான எதிர்பார்ப்புடன் அல்டிமேட் லெவலில் களமிறங்கும் GTA 6.. கேமர்களே ரெடி ஆகுங்க..!
திடீர் முடிவுகள்: எம்.ஜி.ஆர். திரையில் எப்படி வாள்வீசி சண்டை செய்வாரோ, அதே வேகத்தில் அவர் முடிவுகளையும் எடுக்கக்கூடியவர். அவரின் முடிவுகள் எப்போது? எப்படி? இருக்கும் என்பதை யாராலும் கணிக்க இயலாது. அவரின் ஆட்சிக்காலத்தில் ஆளுநருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, அவரை மருத்துவமனையில் சந்திக்க சென்று பாதையை மாற்றி இயக்குனரை சந்திக்க சென்றுவிட்டார்.
அதனைப்போல, எம்.ஜி.ஆர் முதல்வரான பின்னர் அதிமுக - திமுகவை இணைக்க அன்றைய ஒடிசா முதல்வர் பிஜீ பட் நாயக் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வெற்றியடைந்த நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாமல் எம்.ஜி.ஆர் புறப்பட்டு சென்றார்.
துரைமுருகன், கோவை சரளா: மறைந்த தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர், திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகனை படிக்க வைத்தது எம்.ஜி.ஆர். தான். துரைமுருகனுக்கு பாதுகாவலர் என்ற முறையில் கல்லூரி காலத்தில் இருந்தவர் எம்.ஜி.ஆர். அதனைப்போல, கோவை சரளாவையும் அவர் படிக்க வைத்தார். தான் கட்சி தொடங்கியபோது துரைமுருகனை எம்.ஜி.ஆர் தன்னுடன் இருக்க அழைத்தாலும், அவர் கலைஞரின் மீது கொண்ட பற்றாலும், பாசத்தாலும் எம்.ஜி.ஆருடன் சேரவில்லை. ஆனால், துரைமுருகனுக்கு எம்.ஜி.ஆரின் மீது தனிப்பாசம் உண்டு.