ஜூலை 24, ஹர்டோய் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநில பெண்கள் நலன் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சராக இருப்பவர் பிரதிபா சுக்லா (Pratibha Shukla). சமீபத்திய தக்காளி விலையேற்ற (Tomato Price) விஷயத்தில் கருத்தை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
வடமாநிலங்களில் வெளுத்து வாங்கிவரும் கனமழை காரணமாக விளைநிலங்கள் சேதமாகி தக்காளியின் வரத்து கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. இதனால் தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ.130 முதல் அதிகபட்சமாக ரூ.300 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், தக்காளியின் விலையை குறைக்க மக்கள் தக்காளி சாப்பிடாமல் இருக்க வேண்டும் என பேசியுள்ள பிரதீபா சுக்லா, வீடுகளில் தக்காளியை மக்கள் பயிரிட்டு வளர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். Jawan Vijay Sethupathi: ஆக்ரோஷமாக ஷாருக்கானை பார்க்கும் விஜய் சேதுபதி; கண்களே காட்சிதரும் அதிரடி சஸ்பென்ஸ்.. ஜவான் படக்குழு சர்ப்ரைஸ்.!
தக்காளியை மக்கள் சாப்பிடாமல் இருந்தால் அதன் விலை குறைந்துவிடும். தக்காளிக்கு பதில் எலுமிச்சை போன்றவற்றை சாப்பிடுங்கள் என சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்தார்.
அங்குள்ள ஆஷை கிராமத்தில் சத்துணவு மையத்திற்கு அருகே உள்ள இடத்தில் தக்காளி உட்பட சில காய்கறிகளை இயற்கையாக விளைவித்து சத்துணவு மையத்திற்கு உபயோகம் செய்கின்றனர். அதனைப்போல நீங்களும் முயற்சியுங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக வெங்காயத்தின் விலை ஏற்றத்தின்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்கள் வெங்காயம் சாப்பிடுவதை நிறுத்தினால் அதன் விலை குறையும் என தெரிவித்து இருந்தார். தாப்ரோது தக்காளிக்கு அதே விளக்கம் மாநில அமைச்சரால் அளிக்கப்பட்டுள்ளது.