ஜூலை 20, சென்னை (Health Tips): நமது ஊர்களில் கருவேல மரங்களில் கொடியாக காணப்படும் கோவைக்காய் (Kovaikkai or Ivy Gourd), உடலுக்கு பல நன்மைகளை செய்யக்கூடியவை. இவற்றை நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால், நமது உடலுக்கு தேவையான பல்வேறு ஆரோக்கியம் கிடைக்கும்.
தினமும் கோவைக்காயை உண்டு வந்தால் உடல் நலம் மேம்படும். கோவைக்காயை சாப்பிடுவதால் சொரியாசிஸ், சிரங்கு, தேமல், முடி உதிர்வு, பல் சார்ந்த பிரச்சனை, பொடுகு, தொப்பை, சர்க்கரை நோய், சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் பிரச்சனை, உடலில் இருக்கும் கெட்ட கழிவுகள் உட்பட பல்வேறு உடல்நலக்கோளாறுகள் சரியாகும்.
நாளொன்றுக்கு மூன்று வேளை கோவைக்காயை சாறு போல் அரைத்து குடித்து வந்தால் சொரியாசிஸ், படை போன்ற பிரச்சனைகளுக்கு நல்லது. கோவைக்காய் சாரை பருகும் முன்னர் வயிற்றை சுத்தம் செய்து பின் குடிப்பது நல்லது. Trending Video: மனிதர்களைப் போல நடந்து மாஸ் காண்பித்த குட்டி கரடி; வியந்துபோன குட்டீஸ்., அசத்தல் வீடியோ வைரல்.!
பல்வலி, ஈறுகளில் இருக்கும் வீக்கம், ரத்தக்கசிவு, மஞ்சள் கரை உட்பட அனைத்து பிரச்சனைகளுக்கும் கோவைக்காய் தீர்வாக அமைகிறது. அதே போல கோவைக்காய் சாறு குடித்துப்பவர்களுக்கு தொப்பையும் குறையும்.
சர்க்கரை நோயால் சிறுநீர் போக்கு ஏற்படும் பலருக்கும் கோவைக்காய் சாறு நல்லது. சிறுநீரகத்தில் கல் இருந்தால் கோவைக்காயுடன் கத்தரிக்காய் சேர்த்து அரைத்துக் குடித்து வர, சிறுநீரக கல் அரைக்கப்படும்.