Vegetables Women | Health (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 28, சென்னை (Health Tips): நமது தினசரி உடல் செயல்பாடுகளை பராமரிக்க ஜின்க் தனிமச்சத்து அவசியம். ஜின்க் குறைபாடு இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். வளர்ச்சி குறைவு, வயிற்றுப்போக்கு, முடி உதிருதல், கண்கள் மற்றும் சருமம் சார்ந்த பிரச்சனைகள், நோயெதிர்ப்பு சக்தி பிரச்சனை போன்றவையும் உண்டாகும்.

உடலில் இருக்கும் 300 க்கும் அதிகமான என்சைம்கள் உற்பத்திக்கு ஜின்க் முக்கியத்துவம் பெறுகிறது. நமது உணவில் போதுமான வைட்டமின் இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியத்துடன் வளர்ச்சி பெறும். அதற்கு கால்சியம், மக்னீசியம், இரும்புசத்து போன்றவை தேவைப்படும்.  இதனால் ஜின்க் சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது அவசியம். இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நோய் பரவ வாய்ப்புள்ள பருவ காலங்களில், அத்தொற்றுகளில் இருந்து தப்ப நமக்கு உதவி செய்யும்.

பெண்களின் உடல்நலனை பாதுகாக்கும் விஷயங்களில் ஜின்க் சத்து முக்கியப்பங்கு வகிக்கிறது. பெண்களின் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தி உயிரணுக்கள் உற்பத்தி, செயல்பாட்டுக்கு ஜின்க் உதவுகிறது. ஜின்க் சத்துக்களை கொண்ட உணவுகள் இதய நோய், நீரிழிவு நோயில் இருந்து பாதுகாக்கிறது. Nambi Congrats to Adithya L1 Mission: சூரியனை ஆராயும் இஸ்ரோ; மனதார பாராட்டு தெரிவித்த நம்பி நாராயணன்.! 

எலும்புகள், பற்களை வலுப்படுத்துகிறது. ஹார்மோன் உற்பத்தியை சமநிலை படுத்துகிறது. சரும செல்கள் சேதமாவதை தவிர்த்து, சருமத்தை பாதுகாக்கிறது. வைட்டமின்கள் கண்களின் பார்வைக்கு உதவுகிறது. முடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது. பெண்களின் கர்ப்பப்பை பாதுகாப்பு, கருமுட்டை வளர்ச்சி அடைதலுக்கும் உதவி செய்கிறது.

ஜிங்க் சத்து சிப்பிகள், நண்டு, இறால், சாலமன், மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, ஆட்டுக்குட்டி இறைச்சி, வான்கோழி & கோழி இறைச்சி, கொண்டைக்கடலை, பருப்பு வகைகள், கருப்பு பீன்ஸ், பூசணி விதை, முந்திரி, முட்டை, பழுப்பு அரிசி, காளான்கள், முட்டைகோஸ், பட்டாணி போன்றவற்றில் நிறைந்து காணப்படுகிறது.