ஆகஸ்ட் 28, திருவனந்தபுரம் (Technology News): இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட சந்திராயன் 3 வெற்றி அடைந்து, உலகளவில் பாராட்டுகளை பெற்றது. ஒவ்வொரு இந்தியரும் சந்திராயனின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
நிலவில் எந்த ஒரு உலக நாடுகளும் கால்தடம் பாதிக்காத தென்துருவ பகுதியில், இந்தியா வெற்றிகரமாக தனது சந்திராயன் விண்கலத்தை செலுத்தி, அங்குள்ள பகுதிகளில் சோதனை மேற்கொள்ளும் ரோபோவையும் வெற்றிகரமாக இயக்கியது. UK Air Travel Disrupted: தொழில்நுட்ப கோளாறினால் முடங்கியது விமான சேவை; பயணிகள்-விமான நிலைய அதிகாரிகள் கவலை.!
இந்தியாவின் வெற்றி உலகளவில் பல நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது. சந்திராயன் 3 கால்தடம் பதித்த பகுதியை சிவசக்தி என பிரதமர் பெயரிட்டார். அடுத்தபடியாக சூரியனை ஆராய்ச்சி செய்யவும் விண்கலம் செலுத்தப்பட வேண்டிய முயற்சிகள் எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளின் செயல்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ள முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், "ஆதித்யா எல் 1 திட்டம் ஆய்வுத்திட்டம். 15 இலட்சம் கி.மீ தொலைவில் இருக்கும் சூரியனை படிக்கப்போகிறோம். எனது பாராட்டுக்கள்" என தெரிவித்தார்.
#WATCH | Kerala: On Aditya-L1 mission, former ISRO scientist Nambi Narayanan says, "It is a study project, they're going to study (Sun) at a distance of 15 lakhs kilometers...it is a good project" pic.twitter.com/ZV9fudz0RH
— ANI (@ANI) August 28, 2023