செப்டம்பர் 28, கோவை (Health Tips): நலமாக வாழ்வதற்கு உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் அவசியமானதாகும். நாம் அன்றாடம் சமைக்கும் உணவில் சுவைக்காகவும், காரத்திற்காகவும் மிளகு சேர்க்கப்படுகிறது. காரத்திற்கு மிளகாயை விட மிளகு சேர்ப்பது மிகவும் நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நோய் எதிர்ப்பு சக்தி தரும்:
பருவநிலை மாற்றங்களால் பலருக்கும் எளிதில் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் வரக்கூடும். கருப்பு மிளகை கொஞ்சம் நீரில் போட்டு கொதிக்கவிட்டு, அந்த நீரை பருகி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். Michael Gambon: ஹாரி பார்ட்டர் புகழ் நடிகர் 82 வயதில் நிமோனியாவால் காலமானார்; திரையுலகினர் சோகம்.. ரசிகர்கள் கண்ணீர்.!
உடல் எடை குறைப்பு:
உடல் எடையை எடை குறைக்க விரும்புபவர்களுக்கு மிளகு மிகவும் எளிதான தீர்வாகும். காலையில் தண்ணீர் பருகும் போது அதனுடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்தால் உடலில் வளர்சிதை (Metabolism) மாற்றம் அதிகரிக்கும். அதன் விளைவாக கலோரிகள் (Calories) எரிக்கப்படும்.
செரிமானம் மேம்படும்
அஜீரணத்தால் அவதிப்படுபவர்களுக்கு மிளகு சிறந்த நிவாரணமாகும். கருப்பு மிளகு செரிமானத்திற்கு உதவும் திரவங்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. மேலும் அது குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை (Gut bacteria) பாதுகாக்கும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.
இதர சத்துக்கள் மற்றும் மனநலம்:
மிளகு நம் உணவில் இருக்கும் சோடியம், கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உரிந்துகொள்ள உதவுகிறது. மேலும் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், மன அழுத்தத்தை போக்கவும் உணவில் மிளகு சேர்ப்பது மிக மிக நல்லதாகும்.