Paytm (Photo Credit: Pixabay)

டிசம்பர் 28, புதுடெல்லி (Technology News): ஒன் 97 கம்யூனிகேஷன் லிமிடெட் (One97 Communications Limited OCL) நிறுவனத்தின் கீழ் இயங்கும் பேடிஎம் (Paytm), தனது 2023-24 கோடி வணிக பணப்பரிவர்த்தனை மேற்கொண்டதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பேடிஎம் ரீ கேப் 2023 என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர பணப்பரிவர்த்தனைகள்: அந்த அறிக்கையின்படி, "சென்னை, பெங்களூர், கோவா ஆகிய நகரங்களை விடவும் டெல்லியில் பேடிஎம் பயனர்கள் அதிகளவில் செயலியை உபயோகம் செய்து வந்துள்ளது உறுதியாகியுள்ளது. இவர்கள் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அதிக பணப் பரிமாற்றம் செய்துள்ளனர். PM Modi Mourning to Vijayakant: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்.! 

க்யூ ஆர் கோர்டுகள்: இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாக பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டு வரும் நிலையில், பேடிஎம் நிறுவனம் அதற்கான க்யூ ஆர் கோட், சவுண்ட் பாக்ஸ் போன்றவற்றை வழங்கி இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு புதிய உச்சத்தையும் தொட்ட பேடிஎம், நடப்பு காலாண்டில் வழங்கப்பட்ட பார் கோடுகளை அடுக்கினால், அது 40 குதூப் மினாரை விட உயரமாக இருக்கும்.

92 இலட்சம் சாதனங்கள் விநியோகம்: பேடிஎம் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப உலகில் இணைய வழி பணப்பரிவர்த்தனை விஷயத்தில் முக்கிய செயலியாக பங்காற்றி வரும் நிலையில், ரூபாய் 129 கோடி மதிப்பிலான 55 இலட்சம் சாலன்களும் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் மாதத்திற்குள் மட்டும் 92 லட்சத்திற்கும் அதிகமான பேடிஎம் சாதனங்கள் பயனர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றன.

பேடிஎம் விரும்பிகள்: இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள தர்வாஸ் மற்றும் மேகாலயா மாநிலத்தில் உள்ள லைட்மவுசிங் பகுதிகளில் பயனர்கள் பேடிஎம்-ஐ மட்டுமே தற்போது வரை உபயோகம் செய்து வருகின்றனர்" என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.