Kidney Cross sectional view (Photo Credit: Pixabay)

அக்டோபர் 10,  (Health Tips): நம் உடல் ஆரோக்கியத்தில் சிறுநீரகத்தின் செயல்பாடு இன்றியமையாத பங்கு வகிக்கிறது. உடலில் உள்ள கழிவுகளை வடிகட்டி, வெளியேற்றும் முக்கியமான வேலையை சிறுநீரகம் செய்கிறது. நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளில் திரவங்கள் அதிகரிக்கும்போது அது சிறுநீரகத்தின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும்.

சோடியம்

உணவில் அதிக அளவிலான சோடியம் சேர்க்கப்படும் போது, ரத்த அழுத்தம் அதிகரிக்கக் கூடும். அதனால் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவதில் சிரமம் ஏற்படலாம். Actor Nasser Father Death: நாசர் தந்தை மறைவு.! கண்ணீரில் தவிக்கும் குடும்பம்.! இரங்கல் தெரிவிக்கும் நண்பர்கள்.!

பதப்படுத்தப்பட்ட மற்றும் பாக்கெட் உணவுகளில் சோடியம் அதிகமாக இருக்கும். இதனால் ஹைப்பர் டென்ஷன் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம். உணவில் உப்பை அளவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

பொட்டாசியம்

கிட்னியில் அதிகமாக பொட்டாசியம் சேரும்போது, சிறுநீரகத் தொற்று ஏற்படக்கூடும். நாள்பட்ட அளவில் பொட்டாசியம் அதிகரிக்கும் போது இருதய பிரச்சனைகள் வரக்கூடும். ஆரஞ்சு,வாழைப்பழம், ப்ரோக்கோலி  போன்ற உணவுகளை மிதமான அளவில் எடுத்துக் கொள்வது நல்லது.

பாஸ்பரஸ்

உணவில் பாஸ்பரஸ் அதிகரிக்கும்போது, அதை வெளியேற்றும் முயற்சியில், சிறுநீரகங்கள் சேதமடைய கூடும். எலும்புகளை வலுவாக்கும் பாஸ்பரஸ், அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளப்படும் போது, எலும்புகள் பலவீனமாகவும் காரணமாகும். அதனால் பால், மீன் போன்ற உணவு வகைகளை அளவில் சாப்பிட வேண்டும்.