நவம்பர் 01, சென்னை (Health Tips): தொழில்மயமாகிவிட்ட உலகில், நாம் தொடர்ந்து அயராது உழைத்து வருகிறோம். இதனால் நமது உடல்நலன் குறைவது, பின் அதனை நாம் சரிசெய்வது என சுழற்சி முறையில் ஒவ்வொன்றையும் தொடர்ந்து வருகிறோம். அந்த வகையில், இன்று எலும்புகளின் வளர்ச்சி மற்றும் உறுதிக்கு ஏற்றவாறு இருக்கும் உணவுகள் குறித்து காணலாம்.
பால்: பால், தயிர் மற்றும் பாலாடைக்கட்டி
இறைச்சி: முட்டை, மீன், கோழி, ஆட்டு இறைச்சி வகைகள்
கீரை வகைகள்: வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை, பாலாக்கீரை, பசலைக்கீரை, கொத்தமல்லிக்கீரை,
காய்கறிகள்: பீன்ஸ், பிரண்டை, முட்டைகோஸ், அவரைக்காய், முருங்கைக்காய், காளிபிளவர், முள்ளங்கி, கேரட், பீட்ரூட்
பழங்கள்: பேரிட்சை, அத்திப்பழம், மாதுளை, திராட்சை
பயறு வகைகள்: பாசிப்பயறு, துவரம்பருப்பு, கம்பு, வரகு, சோளம், சாமை, குதிரைவாலி, எள்ளு, கொள்ளு, பாதம், முந்திரி பருப்பு
பால் ஒவ்வாமை கொன்றவர்கள் சோயா பால், தேங்காய் பால், பாதாம் பால் போன்றவற்றை சாப்பிடலாம். Commander of Hamas Eliminated: ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய படைத்தளபதி கொல்லப்பட்டார்; இஸ்ரேல் அறிவிப்பு.!
மேற்கூறிய பொருட்களில் கால்சியம் நிறைந்து காணப்படுகிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் கட்டாயம் தேவை என்பதால், மேலுள்ள சுழற்சி முறையில் நாம் உட்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
வைட்டமின் டி (Vitamin D): தினம் அதிகாலை நேரங்களில், சூரியனின் உதயத்தின்போது நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. இதனால் சூரிய ஒளி நமது உடலின் மீது நேரடியாக படும். இவை நமது உடலில் கால்சியம் உற்பத்தியாக தேவைப்படும் வைட்டமின் டி சத்தை வழங்கும்.
கொள்ளு: சோயாவுக்கு இணையான கால்சியம் சத்துக்களை கொண்ட கொள்ளு, எலும்புகளின் உறுதித்தன்மைக்கு நல்லது ஆகும். எலும்பை உறுதியாக்கி, தேவையில்லாத கொழுப்பு மற்றும் சதையை குறைக்கும் வல்லமை கொள்ளுக்கு உண்டு.
பிரண்டை: உள்ளூரில் காட்டுப்பகுதிகளில் இயற்கையாகவே செழிப்புடன் வளரும் தன்மை கொண்ட பிரண்டையை கால்சியம், பாஸ்பிரஸ் உள்ளது.