Tirunelveli Halwa (Photo Credit: Indiamart.com)

மே 06, திருநெல்வேலி (Cooking Tips): நாம் விரும்பி சாப்பிடும் இனிப்பு சுவையுள்ள பொருட்களில் அல்வா உலகப்புகழ் பெற்றது. அதிலும் திருநெல்வேலி அல்வாவின் சுவை எங்கும் கிடைக்காதது. அதனை வாங்க தினமும் அங்கு வரிசையாக காத்திருக்கும் கூட்டமே அதற்கு சான்றாக அமைகிறது. இன்று இருட்டுக்கடை அல்வா செய்யும் முறை குறித்து காணலாம்.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 3 கப்,

நெய் - 300 மிலி,

சர்க்கரை - 5 கப்,

வறுத்த முந்திரி - 30

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட கோதுமை மாவை சிறிதளவு நீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்க வேண்டும். மாவை மிருதுவான பத்துடன் பிசைந்த பின்னர், 2 லிட்டர் அளவு நீர் ஊற்றி சுமார் 6 மணிநேரம் ஊற வைத்திடவும்.

6 மணிநேரம் கழித்தும் ஊறிய மாயை நீரிலேயே கரைத்து, அதனை வடிகட்டி பால் மட்டும் தனியே பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பால் புளிப்பதற்காக, இரவில் மூடிவைத்து மறுநாள் காலையில் பார்த்தால் ஏடுகள் இருக்கும். அதனை நீக்கி பாலை வடிகட்ட வேண்டும். YouTuber Top Speed Kills: டாப் ஸ்பீடில் போனவர் தலைசிதறி பரிதாப மரணம்.. யூடியூபருக்கு நேர்ந்த பயங்கர சம்பவம்..!

அல்வா தயார் செய்ய தேவையான பால் கிடைத்ததும், கடாயை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி, 15 நிமிடம் மிதமான தீயில் பாலினை சுண்டவிட வேண்டும். நாம் கரண்டியால் தொடர்ந்து கிளற, பால் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டிப்பட்டு வரும்.

அல்வா பதம் வரும்போது, எடுத்துக்கொண்ட சர்க்கரையை சேர்த்து நன்கு கிளற வேண்டும். அல்வா பதம் நன்கு வந்ததும் அதனை இறக்கிவிடலாம். அல்வாவுக்கு சேர்க்கும் சர்க்கரை பாகை தயாரிக்க, முதலில் 6 ஸ்பூன் சர்க்கரையை பாத்திரத்தில் வைத்து, மிதமான சூட்டில் வறுக்கும்போது இழக்க பாகு போல உருப்பெறும்.

சர்க்கரை பாகு தயாரானதும், அதனுடன் நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்த அல்வாவை சேர்த்து கிளறினால் சுவையான அல்வா தயார். அல்வாவை கிளறும்போதே சிறிதளவு நெய், வறுத்த முந்திரியை சேர்த்துக்கொண்டு இறுதியில் இறக்கலாம். அல்வா கையில் ஒட்டாமல் வரும் பட்சத்தில், அது சரியான பதத்தில் தயாராகிவிட்டது என்று பொருள்.