![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/08/Ulundhu-Soru-Photo-Credit-YouTube-380x214.jpg)
ஆகஸ்ட் 22, சென்னை (Health Tips): இன்றளவில் பல கிராமங்களில் பாரம்பரிய உணவுகள் பக்கம் மக்கள் திரும்பியுள்ளது மகிழ்ச்சியை வழங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களுக்கு என பிரத்தியேக பாரம்பரிய உணவுகள் மண்சார்ந்த உணவுகளாக போற்றப்படுகிறது.
இந்த மண்சார்ந்த உணவுகளில் உளுந்தஞ்சோறு மக்களின் விருப்ப உணவுகளில் முக்கியமான ஒன்றாகும். உளுந்து நமது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும் புரதம், கொழுப்பு, வைட்டமின் சத்துக்களை கொண்டுள்ளன. இதனால் வளரிளம் பெண்களுக்கு சிறந்த உணவாகும்.
உளுந்தை களியாக செய்து சாப்பிடுவது மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்கும். கால்சியம், இரும்புசத்து, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை இடுப்பு எலும்புகளை வலுப்படுத்த உதவி செய்யும். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.
அதேபோல, நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் பேருதவி செய்யும். நமது கிராமங்களில் அரிசி-உளுந்து கொண்டு செய்யப்படும் உளுந்தஞ்சோறு பல நன்மைகளை கொண்டது. இது கிராமிய உணவுகளில் முக்கியமான ஒன்று ஆகும். இன்று அதை எப்படி செய்வது என காணலாம். Hyderabad Shocker: கணவன்-மனைவி தகராறில், தெருவில் விளையாடிய அப்பாவி சிறுவனின் கழுத்தை அறுத்த ஆட்டோ ஓட்டுநர்; பதைபதைக்கும் வீடியோ.!
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 கிண்ணம்,
உடைத்த கருப்பு உளுந்து - 1 கிண்ணம்,
பூண்டு - 20 பற்கள்,
தேங்காய் துருவல் - 1/2 கிண்ணம்,
சீரகம் & வெந்தயம் - தலா 2 சிறிய கரண்டி,
நல்லெண்ணெய் - 2 கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட உளுந்தை வானெலியில் 5 நிமிடம் வரை வறுத்து எடுக்க வேண்டும். பின், அரிசி-உளுந்தை கழுவி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சீரகம்,வெந்தயம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பின், ஒரு கிண்ணம் அரிசிக்கு 3 கிண்ணம் நீர் என்ற அளவில் தண்ணீரை ஊற்ற வேண்டும். அரிசி-உளுந்தையும் சேர்த்திடலாம். China Taiwan Issue: “தைவான் நாடும் இல்லை, இன்னும் நாடாகாது” – மீண்டும் பற்றியெரியும் தைவான் விவகாரம்; சீனாவின் விடாப்பிடி.!
இதனோடு துருவிய தேங்காய் சேர்த்து கொதிக்கவிட்டு உப்பு சேர்க்க வேண்டும். குக்கரில் இதனை தயார் செய்பவர்கள் 3 விசில் வரும் வரை காத்திருக்கலாம். இறுதியாக கறிவேப்பில்லை தூக்கி இறக்கினால் சுவையான உளுந்தஞ்சோறு தயார்.
உளுந்தஞ்சோறு சாப்பிடும் முன் சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடுவது சுவையை தரும். நாட்டுக்கோழி குழம்பு, கறிக்குழம்பு, எள்ளு துவையல் போன்றவற்றுடன் உளுந்தஞ்சோறு சாப்பிடலாம்.