Vegetabless & Fruits Mango (Photo Credit: Twitter / Pixabay)

ஏப்ரல் 26, சென்னை (Health Tips Tamil): கோடைகாலம் (Summer Season) என்றாலே சுட்டெரிக்கும் வெயில், சூட்டை தணிக்க நுங்கு, இளநீர் உட்பட பல இயற்கை உணவுகள் என்று இருப்போம். இன்றளவில் இயற்கை (Natural Foods) உணவுகளின் தரம் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகியுள்ளது. அவை காய்கறியில் (Vegetables) தொடங்கி பழங்கள் வரையில் நீண்டுகொண்டே செல்கிறது.

கடைகளில் விற்பனைக்கு வரும் பழங்களை விரைந்து பழுக்க வைக்க பல்வேறு புதிய யுக்திகளை மேற்கொள்ளும் சிலர், பொருட்களின் பளபளப்பை காண்பித்து விற்பனை செய்கின்றனர். சந்தைகளில் இருக்கும் பொருட்களில் நல்லவை எவை? தீயவை எவை என்று பிரித்தறிய தெரியாத மக்கள் உடலுக்கு கேடானதை வாங்கி சாப்பிடுகிறார்கள்.

கோடையில் சீசன் தொடங்கி அமோகமாக விற்பனையாகும் மாம்பழங்கள் (Mango Season) ரசாயன கற்கள் அல்லது ரசாயனம் தெளித்து பழுக்க வைப்பது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இவ்வாறான பழங்களை சாப்பிட்டால் உடல்நலம் கேள்விக்குறியாகும். Fact Check: கோடையில் பெட்ரோல் டேங்க் நிறைந்திருந்தால் வாகனம் வெடிக்குமா?.. விளக்கம் கொடுத்த இந்தியன் ஆயில் நிறுவனம்.!

நமது சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பழங்களில், நல்லவை குறித்து கண்டறியும் வழிமுறைகளை உணவு பாதுகாப்பாத்துரை அதிகாரி சதீஷ் விளக்கி இருக்கிறார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் பல்வேறு தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.

அதாவது, மாம்பழங்களில் சில கார்பைடு கற்கள், ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்படுகிறது. இதனால் உடல் உபாதைகள் ஏற்படும். மாம்பழம் வாங்க கடைக்கு நீங்கள் சென்றால், அவை பளபளப்புடன் இருந்தால் நீங்கள் சந்தேகப்பட வேண்டும். அங்குள்ள பழங்கள் அனைத்தும் ஒரேமாதிரியாக பழுத்து இருந்தால், அவற்றை கவனிக்க வேண்டும்.

பழத்தை நுகர்ந்து பார்த்தால் கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்டது எந்த விதமான நறுமணத்தையும் கொண்டு இருக்காது. இயற்கையாக பழுத்தது நல்ல மனதுடன் இருக்கும். நாம் வாங்கிச்சென்ற மாம்பழத்தை நீருக்குள் இட்டு சோதனை செய்தால், கற்கள் வைத்து பழுத்தது நீரில் மிதக்கும். இயற்கையாக பழுத்தது நீரில் மூழ்கிவிடும். Mobile Blast: சார்ஜ் ஏற்றிகொண்டே வீடியோ பார்த்த 8 வயது சிறுமி செல்போன் வெடித்து பரிதாப பலி.. கண்ணீரில் பெற்றோர்..!!

பழத்தை நாம் சாப்பிட நறுக்கும்போது கற்கள் வைத்து பழுத்தது காய் தன்மையுடன் இருக்கும். விதைப்பகுதிக்கு அருகே வெள்ளை நிறத்துடன் இருந்தாலும் அவை செயற்கையாக பழுத்தது ஆகும். இயற்கையாகவே பழம் கீழிலிருந்து மேலே கம்பு நோக்கி சென்று பழுக்கும். அதேபோல சிவப்பு, மஞ்சள் நிறத்துடன் இருக்கும். மாம்பழம் கற்கள் வைத்து பழுக்கப்பட்டு இருந்தால், அவற்றின் சுவை 50% - 60% புளிப்புடன் இருக்கும்.