Miss World 2024 Krystyna Pyszkova (Photo Credit: @TheGlamourBuff)

மார்ச் 10, மும்பை (Mumbai): 71வது உலக அழகிப்போட்டி மும்பையில் வைத்து மார்ச் 09ம் தேதியான நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் 2024 உலக அழகி பட்டத்தை கரோலினா பைலாவ்ஸ்கா (Krystyna Pyszková) வென்றார். செக் குடியரசை சேர்ந்த பெண்மணி கரோலினா, 2022ம் ஆண்டுக்கான உலக அழகியால் 2024ம் ஆண்டுக்கான மகுடத்தையும் பெற்றார். 25 வயதுடைய கரோலினா மிஸ் உலக அழகி பட்டம் வென்றது, தனது வரலாற்று வெற்றி என கூறி சிறப்பித்தார். Thala Dhoni Practice: "விசில் போடு மாமே" - ஐபிஎல் போட்டிக்காக தீவிரமாக தயாராகும் தல தோனி; அசத்தல் வீடியோ உள்ளே.!

20 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் உலக அழகி போட்டி: இந்த விஷயம் குறித்து அவர் பேசுகையில், "நான் முழு மகிழ்ச்சி, உற்சாகத்துடன் இருக்கிறேன். கலாச்சாரம், இயற்கையின் அழகை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நான் செயல்படுவேன். செக் குடியரசில் அரண்மனைகள், இயற்கை அழகுகள் என பார்க்க வேண்டிய விஷயங்கள் நிறைந்து காணப்படுகின்றன" என தெரிவித்தார். இந்தியாவில் தற்போது நடந்த உலக அழகிப்போட்டி, கடந்த 20 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் நடைபெற்றுள்ளது. Children Mobile Use: பச்சிளம் குழந்தை அழுகிறது என செல்போன் கொடுக்குறீங்களா?.. அதிர்ச்சி தகவல் உள்ளே.. பெற்றோர்களே மறந்தும் பண்ணாதீங்க.! 

முந்தைய அழகிகள்: இந்தியாவின் சார்பில் கடந்த 2022ம் ஆண்டு மிஸ் பெமினா இந்திய அழகி பட்டம் வென்ற ஷினி செட்டி கலந்துகொண்டால், அவரால் முதல் நான்கு இடங்களுக்குள் வர இயலவில்லை. இதனால் இந்தியாவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில், இந்திய போட்டியாளரால் வெற்றிபெற இயலவில்லை. கடந்த 1996ம் ஆண்டு ரீட்டா பிரியா, 1994ல் ஐஸ்வர்யா ராய், 1997ல் டயானா ஹைடன், 1999ல் யுக்தா முகே, 2000ம் ஆண்டு பிரியங்கா சோப்ரா, 2017ல் மனுஷி சில்லர் ஆகியோர் முந்தைய உலக அழகியாக இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.