Andhra Pradesh Elections 2024 | Condom Distribution (Photo Credit: @Jay_Apoorva18 X)

பிப்ரவரி 22, அமராவதி (Andhra Pradesh News): ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் மே மாதம் 2024ல் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் (Andhra Pradesh Assembly Poll 2024) நடைபெறவுள்ளது. தற்போது யுவஜன ஸ்ராமிக விவசாயி காங்கிரஸ் (YSR Congress Party) கட்சியின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி செயல்பட்டு வருகிறார். ஒய்.எஸ்.ஆர் தலைமையிலான ஆந்திர அரசு, பல அதிரடி திட்டங்களை தொடங்கி வைத்து இந்திய அளவில் கவனம் பெற்றது.

2024 ஆந்திராவில் ஆட்சி யாருக்கு?? அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியாக என். சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி (Telugu Desam Party) செயல்பட்டு வருகிறது. இரண்டு கட்சிகளுக்கும் இடையே ஆட்சியை 2024ல் பிடிப்பது தொடர்பாக பல்வேறு போட்டிகள் நிலவி வருகின்றன. 2024 சட்டப்பேரவை தேர்தலுடன், அம்மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலும் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Satellite Out of Control: கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வரும் ஐரோப்பாவின் செயற்கைகோள்; விஞ்ஞானிகள் எச்சரிக்கை.! 

கட்சி பெயருடன் ஆணுறை விநியோகம்: தேர்தல் போட்டிகள் இருதரப்பு தொண்டர்களிடையே கடும் விவாதம், போட்டிகளை உருவாக்கி இருப்பதால் அம்மாநில அரசியல்களம் சூடேறி இருக்கிறது. தங்களுக்கு வாக்குகளை சேகரிக்கும் பணியில் பல விதமான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், வீடு வீடாக கட்சியின் பெயரில் காண்டம் (Andhra Election Condom Distribution) விநியோகம் செய்யும் சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளன.

அடுத்து வயகராவா? முதலில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் ஆணுறை விநியோகம் செய்யப்படுவதாக ஒய்.எஸ்.ஆர் கட்சியினர் வீடியோ வெளியிட்டு குற்றசாட்டை முன்வைக்க, இது காண்டம் என்றால் நீங்கள் விநியோகம் செய்வதற்கு பெயர் என்ன? என்று அவர்களும் தங்களின் எதிர்க்கட்சி சார்பில் காண்டம் விநியோகம் செய்யப்படுவதாக குற்றசாட்டை முன்வைத்து இருக்கின்றனர். ஒருவர் தனது கருத்துப்பதிவேட்டிலும், இப்போது காண்டம்., அடுத்தது வயகரவா? என கேள்வியை முன்வைத்து இருக்கிறார்.

இந்த விஷயம் தொடர்பாக இருகட்சிகளின் தலைமை சார்பில் எவ்வித கருதும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.