நவம்பர் 29, புதுடெல்லி (New Delhi): கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்து நிறைவேற்றியது. இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இந்திய அளவில் நடந்த கடுமையான போராட்டத்தை, கொரோனா கட்டுப்பாடுகள் நீர்த்துப்போக செய்தன.
மத்திய அரசும் குடியுரிமை திருத்த சட்டத்தின் சரத்துகளை செயல்படுத்தும் நடைமுறையை மேம்படுத்தாமல் இருந்தது. இந்நிலையில், மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "குடியுரிமை திருத்த சட்ட மசோதா நமது நாட்டின் சட்டம், அதனை யாராலும் தடுக்க முடியாது. குடியுரிமை திருத்த சட்டத்தினை அமல்படுத்துவோம்" என தெரிவித்தார். இதன் வாயிலாக குடியுரிமை திருத்த சட்ட மசோதா இந்தியாவில் முழுவீச்சில் அமல்படுத்தப்படுவது உறுதியாகியுள்ளது. BCCI Extension of Contracts for Head Coach: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர், துணைப் பணியாளர்களுக்கான ஒப்பந்தங்கள் நீட்டிப்பு: பிசிசிஐ அறிவிப்பு.!
2019ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட குடியுரிமை திருத்த சட்டமசோதாவின்படி, 1955ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட சட்டத்தின் சரத்துகள் மாற்றி அமைக்கப்படும். தற்போது வரை இந்தியாவில் 12 ஆண்டுகள் நன்மதிப்பில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்க அனுமதி உண்டு. இவர்கள் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களாக இருக்கலாம்.
ஆனால், சட்டத்திருத்த மசோதாவின் காரணமாக இனி மேற்கூறியவர்களுக்கு 5 ஆண்டுகளில் குடியுரிமை கிடைக்கும். அதேநேரத்தில் பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வரும் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை விவகாரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுவே எதிர்ப்புக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.