Cotton Candy | Gobi Manchurian (Photo Credit: Indiamart.com / Pixabay)

மார்ச் 11, பெங்களூர் (Karnataka News): இன்றளவில் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் துரித உணவுகள் மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்து இருப்பது கவலையை அளிக்கும் வகையில் உள்ளது. ஏனெனில், அதன் சுவைக்காக சேர்க்கப்படும் ராசயங்கள் மக்களின் உணவு மீதான நேரடி மற்றும் மறைமுக தாக்கம் போன்றவை ஏற்படுத்துகிறது. அவற்றின் தரம் என்பது கேள்விக்குறியானாலும், நாவை கட்டுப்படுத்த இயலாமல் அதனை மக்கள் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.

பஞ்சுமிட்டாய் நிறமிக்கு தமிழ்நாடு & புதுச்சேரியில் முதலில் தடை: இவ்வாறான விஷயங்கள் மக்களின் உடல்நலனை நேரடியாக பாதித்து, எதிர்கால பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. சமீபத்தில் புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாயில், ரோஸ் நிறத்திற்காக தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் கேடான ரசாயனம் சேர்க்கப்பட்டது தெரியவந்து தடை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மாநில அரசு பஞ்சுமிட்டாயை தடை விதித்து உத்தரவிட்டது. Cotton Candy Ban: பஞ்சுமிட்டாய் சாப்பிட்டால் புற்றுநோயா?. விரட்டி அடிக்கும் உணவு பாதுகாப்புத்துறையினர்..!

கோபி மஞ்சூரியனுக்கு (Gobi Manchurian Ban) கர்நாடகாவில் தடை: இந்நிலையில், கர்நாடக மாநிலம் முழுவதும் கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சுமிட்டாய்க்கு சேர்க்கப்படும் ரசாயனம் ரோடமைன்-பி (Rhodamine-B) எனப்படும் ரசாயன வேதிப்பொருள் காரணமாக உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து, சுகாதாரத்துறை இதுகுறித்து விசாரணை நடத்தி, உணவு மாதிரிகளையும் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தது.

ஆய்வில் கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சு மிட்டாயை ரோடமைன் சேர்க்கப்படுவது உறுதியாகவே, அதற்கு அதிரடி தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தடையை மீறி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் உத்தரவிட்டுள்ளார்.