ஆகஸ்ட் 25, சென்னை (Health Tips): மனிதராக பிறந்து தலைவலியை அனுபவிக்காத நபர்கள் யாருமே இல்லை. மனிதகுலத்திற்கு பொதுவான விஷயமாக இருக்கும் தலைவலி, ஆண்களை விடவும் பெண்களுக்கு ஏற்படுகிறது. இன்றளவில் பலருக்கும் அடிக்கடி ஏற்படும் தலைவலி (Causes of Headache), சில மணிநேரத்திற்கு அல்லது சில நாட்களுக்கு கூட தொடரும்.
இதனால் தலைவலி விவகாரத்தை நாம் எப்போதும் அலட்சியமாக எடுத்துக்கொள்வது தவறானது. தலைவலி வருவதற்கான காரணங்களை நாம் முதலில் சுதாரித்து கண்டறிந்துகொள்ள வேண்டும். அதனை நாம் அறிந்தால்தான் சுயமாக அல்லது மருத்துவரின் உதவியை நாடி அதனை சரி செய்யலாம்.
கோடைகாலத்தில் ஏற்படும் தலைவலி பிரச்சனை வெப்பத்தின் கடும் தாக்கம் காரணமாக ஏற்படலாம். வெப்பம் மூளைக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவை குறைத்து தலைவலியை உண்டாக்கும். நாம் குளித்துவிட்டு வந்தாலோ அல்லது உடலை குளிர்ச்சியாக்கும் இயற்கை சாறுகள் எடுத்த சிலமணிநேரத்தில் உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பி தலைவலி சரியாகும். Delhi Metro Heated Argument: பெண்கள் பெட்டிக்குள் நுழைந்த இளைஞர்; பயங்கர வாக்குவாதம் செய்த பெண் பயணி.!
அதேபோல, அதிகளவு வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும் தலைவலியை உண்டாக்கும். மூளையின் இயக்கத்திற்கு அதிக முக்கியம் குளுக்கோஸ் மற்றும் ஆக்சிஜன் ஆகும். இவை நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் மூலமாக மூளைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆக்சிஜன் மற்றும் குளுக்கோஸ் சரிவர கிடைக்காத பட்சத்தில், வலி உணர்திறன் நியூரான் அமைப்புகள் மூளையை தூண்டி தலைவலியை உண்டாக்கும்.
நாட்கள் சென்று அடைத்து வைக்கப்பட்ட வினிகர், சோயா சாஸ் போன்றவற்றில் இருக்கும் அமினோ அமிலம், உடலில் இருக்கும் இரத்த நாளத்தினை கட்டுபடுத்தி விரிவடைய செய்வதால் கூட தலைவலி ஏற்படும். பழைய உணவுகள் மற்றும் புளித்த உணவுகளும் தலைவலிக்கு காரணமாக அமைகிறது.
நமது உடலின் முக்கிய உறுப்புகளுக்கு தேவைப்படும் மெக்னீசியம் குறைபடும் பட்சத்தில் தலைவலி ஏற்படும். நீர்சத்து குறைபாடு காரணமாகவும் தலைவலி ஏற்படும். பகல் நேரத்தில் உடலுக்கு தேவையனை தண்ணீர் குடிக்காமல் இருத்தல், உடலில் நீரிழப்பை ஏற்படுத்தி தலைவலியை உண்டாக்கும். WhatsApp Update: போட்டோவை தொடர்ந்து வீடியோவையும் எச்டி தரத்தில் அனுப்பலாம் – விரைவில் அறிமுகமாகிறது; வாட்சப் அறிவிப்பு.!
நீர்ச்சத்து குறைவதால் இரத்தம் கெட்டியாகி, மூளைக்கு ஆக்சிஜன் விநியோகம் தடைபடுவதால் ஒற்றைத்தலைவலி ஏற்படும். உடலுக்கு ஓய்வு கிடைக்காத பட்சத்திலும் தலைவலி உண்டாகும். தினசரி வேலைப்பளு ஹார்மோன்களின் அளவை குறைத்து, இரத்தநாளம் சுருங்கி நீர்ச்சத்து குறையும்.
பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் மனஅழுத்தம், தசைபிடிப்பு பிரச்சனையில் தலைவலியும் மேலோங்கும். அதிக நேரம் நாற்காலியில் அமர்ந்து கணினியில் வேலை செய்வோருக்கும் தலைவலி உண்டாகும். தோள்பட்டை இறுக்கமாகி, கண்களுக்கு ஓய்வு கிடைக்காமல் இருப்பதால் தலைவலி உண்டாகும்.
சில வாசனை திரவியங்கள் மணம், நேரடியாக மூக்கின் வழியே மூளைக்கு எடுத்து செல்லப்பட்டு வேதிப்பொருட்களின் தன்மை காரணமாகவும் தலைவலி உண்டாகும். உறக்கத்தில் பற்களை கடித்தாலும் தலைவலி உண்டாகும்.