ஜனவரி 16, சென்னை (Health Tips): தினசரி அலுவலகத்தில் பணியாற்றுவோர் காலையில் 09:00 மணிக்கு வேலைக்குச் சென்று, மீதும் மாலை 4 முதல் 6 மணிவரை பணியாற்றிவிட்டு வீட்டிற்கு திரும்புவார்கள். இவ்வாறான நேர அமைப்பை கொண்ட பணியாளர்கள் பலரும், மதியம் உணவு சாப்பிட்டதும் ஒரு குட்டி தூக்கம் என்பதை எதிர்பார்த்து பல நேரங்களில் காத்திருக்கின்றனர். ஆனால், அலுவலகங்களில் பணியாற்றி வரும் அவர்களுக்கு இவை எட்டாக்கனி ஆகும்.
குட்டித்தூக்கம் நன்மைகள்: வீட்டில் இருந்து பணியாற்றுவோர், தற்போதைய காலகட்டத்தில் குறைந்தபட்சம் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை தங்களின் மதிய உணவு இடைவேளையின்போது குட்டி தூக்கத்தை எடுத்துக்கொள்கின்றனர். இரவு நேரத்தினை போல பகல் மற்றும் மதிய வழிகளில் தூங்குவது ஆரோக்கியமானது இல்லை எனினும், குட்டி தூக்கம் ஆரோக்கியமானது என்றும் கூறலாம். மதிய நேர உணவுக்கு பின்னர் ஏற்படுத்தப்படும் தூக்கம் அறிவாற்றலை மேம்படுத்த உதவி செய்கிறது, மன அழுத்தத்தை குறைக்கவும், எஞ்சிய வேலை நேர பணிகளை விரைந்து செய்யவும், உடலுக்கு தேவையான சக்தியை வழங்கும். Road Accident 4 Killed: அதிவேகமாக வந்து டிவைடரில் மோதிய கார்: உருண்டு விழுந்து 4 பேர் பரிதாப பலி..!
மனசோர்வு, எரிச்சலை நீக்க உதவும்: மதிய நேரத்தில் 70% பணியாளர்களால் உறக்கம் விரும்பப்பட்டாலும், அவர்களின் பணிசூழலால் அதற்கு வாய்ப்பு இல்லை. எஞ்சியோர் குட்டி தூக்கத்தை மேற்கொள்கின்றனர். மதியம் குட்டி தூக்கம் எடுத்துக்கொள்வதால் உடலுக்கு போதுமான அளவு தூக்கம் கிடைக்கும். வேலைநேரத்தில் ஏற்பட்ட மனசோர்வு உட்பட களைப்பை குறைக்க, மதிய நேர தூக்கம் உதவி செய்யும். எரிச்சல், கடுகடுப்பு போன்ற மனநிலையில் இருப்பவர்களுக்கு மதிய நேர தூக்கம் அந்த தாக்கங்களை குறைக்கும், நேர்மறை மனநிலை எண்ணமும் அதிகரிக்கும். கற்றல் திறன் மேம்படும், நினைவுகளை தக்க வைக்கவும் உதவி செய்யும், உணவு செரிமானத்திற்கும் உதவி செய்யும். மதிய நேரத்தில் உறங்க முயற்சிப்பவர்கள் மதியம் ஒரு மணி முதல் மூன்று மணிக்குள் உறங்கி எழுந்திருக்கலாம்.