Children Playing | Summer Season (Photo Credit: Parents / Pixabay)

ஏப்ரல் 05, சென்னை (Health Tips): நாளொன்றுக்கு 5 விதமான பழங்கள் மற்றும் சில காய்கறிகளை உணவாக எடுத்துக் கொண்டால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். தினமும் டம்ளர் அளவு மாதுளை ஜூஸ் குடித்து வர இரத்த அழுத்த பிரச்சனை தீரும். மனநலம் சார்ந்த பிரச்சனை உடையோர், மூளை நரம்பில் பாதிப்பு இருப்பவர்கள், தினமும் தர்பூசணியை சாப்பிட்டு வரலாம். இதனால் மன அழுத்தம், மன பயம் போன்றவை நீங்கும்.

இரத்த சிவப்பணு அதிகரிக்க: அவ்வப்போது ஆப்பிள் சாப்பிட உடலில் இருக்கும் நச்சுக்கள் நீக்கப்படும். பூண்டு சாப்பிட்டால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் உற்பத்தியாகும், கேன்சர் செல்கள் உருவாகுதல் தடுக்கப்படும். ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்க புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, உளுந்து, துவரை, பசலைக்கீரை, கேழ்வரகு போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். Rajasthan Shocker: காய்கறி வியாபாரியை அடித்தே கொலை செய்த காவல் ஆய்வாளரின் மகன்; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.! 

உடல் சூடு குறைய: மோர், உளுந்த வடை, பனங்கற்கண்டு, பச்சை பயிறு, வெங்காயம், சுரைக்காய், நெல்லி, மாதுளை, வெந்தயக்கீரை, கோவைக்காய், இளநீர் ஆகியவை சூட்டை தணிக்கும் குணம் கொண்டது. வயிற்றுப்பூச்சி தொல்லையால் அவதிப்படுவோர் சுண்டைக்காயை சாப்பிடலாம். வேப்பிலை, மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம், சிறுகீரை, கருப்பட்டி, வெள்ளம் ஆகியவை உடலில் இருக்கும் நச்சு தன்மையை நீக்கும்.

கண்கள் நலம்பெற: பொன்னாங்கண்ணி கீரை கண் நோய்களை குணமாக்கும். கைக்குத்தல் அரிசி உடலில் நார்ச்சத்து நிறைவதற்கு உதவி செய்யவும். பப்பாளியில் இருக்கும் மருத்துவ குணம் நமது கண்களுக்கு மிகவும் நல்லது. அதிக நாட்கள் உணவை எக்காரணம் கொண்டும் குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடக்கூடாது. இதனால் உணவின் சத்துக்கள் குறைவதோடு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியமும் இழக்கப்படும்.