ஜனவரி 22, சென்னை (Chennai): இந்திய அளவில் சமீப காலமாகவே மாரடைப்பு (Heart Problems) பாதிப்பு என்பது அதிக அளவு இருக்கிறது. இதனால் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளும் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு முன்னதாக பலரும் ஓரிடத்தில் அமர்ந்து வேலை செய்தது இல்லை, அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். ஆனால், உள்ளங்கையில் உலகம் வந்ததை தொடர்ந்து பலரும் அமர்ந்து வேலை செய்து வருகின்றனர். உடல் உழைப்பு இல்லாததால் நேரும் சோகங்கள்: இது நேரத்தை மிச்சப்படுத்தி உற்பத்தி திறனை மேம்படுத்துகிறது எனினும், இவ்வாறான வாழ்க்கை முறை பல கடுமையான நோய்களுக்கும் வித்திடுகிறது. இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கு பெரும் காரணமாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது முக்கிய காரணியாக அமைந்துள்ளது. குழந்தைகளும் தாங்கள் விளையாட வேண்டிய காலகட்டத்தில் விளையாடாமல், தீவிரமான நோய் பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர்.
துரித உணவுகளால் ஏற்படும் பிரச்சனை: இதற்கு காரணமாக மொபைல் போன் உபயோகம், வீடியோ கேம் பயன்பாடுகள் இருக்கின்றன. நமது செயல்பாடுகளை தவிர்த்து அடுத்தபடியாக சிறுதானியங்கள், முளைகட்டிய பயிர், பழங்கள், காய்கறிகள் என ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தவிர்த்து விட்டு, பிரியாணி (Biryani) கடை, ஃபாஸ்ட் புட் (Fast Food) என உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமும் இதயப்பிரச்னைகளுக்கு உந்துகோலாக அமைகிறது. துரித உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளில் இருக்கும் கொழுப்புகள், உடலிலேயே தங்கி பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தி, பின்னாளில் அது மெல்லக்கொல்லும் விஷம் போல அவர்களை பாதிக்கிறது. SC Direct to TN Govt: ராமர் கோவில் கும்பாவிஷேக நேரடி ஒளிபரப்பு தடை விவகாரம்; தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
மது & புகை அறவே கூடாது: இளம் வயதிலேயே சர்க்கரை நோய் ஏற்படும் அபாயமும் அதிகரித்து, பசியின்மை பிரச்சனையும் உண்டாகிறது. துரித உணவுகளை விரும்புதல் போன்றவை, அது சார்ந்த பக்கவிளைவு நோய்களை ஏற்படுகின்றது. இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு அபாயத்தை குறைப்பதற்கு உடல் உழைப்பை முக்கியத்துவப்படுத்த வேண்டும். அதேபோல, ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும். மாரடைப்புக்கு மன அழுத்தம் போன்ற காரணமும் முக்கியமாக அமைகிறது. உணவு பழக்க வழக்கம், செல்போனுக்கு அடிமையாகுதல், வாழ்க்கை முறை மாற்றங்கள், புகைபிடித்தல், மதுபானம் அருந்துதல் என பல்வேறு காரணிகள் இதயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு காரணமாகின்றன. வருடத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்வது திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு வழிவகை செய்யாமல் இருக்கும். உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல் போன்றவை உடல் நலனை பாதுகாக்க உதவும்.
பெற்றோர்களே கவனமாக இருங்கள்: உடலுக்கு சத்துக்களை வழங்கி தாய்ப்பாலூட்டி வளர்க்க வேண்டிய காலத்திலேயே நாம் குழந்தைகளுக்கு பிஸ்கட், குர்குரே, லெஸ், பிங்கோ, செயற்கை இனிப்புகள், துரித உணவுகளை பழக்கப்படுத்துகிறோம். இது நாம் நமது கைகளால் குழந்தைகளுக்கு இன்முகத்துடன் விஷத்தை ஊட்டுவதற்கு சமம் ஆகும். முடிந்தளவு உள்ளூரில் தயாரிக்கப்படும் நம்பகத்தன்மை கொண்ட பேக்கரிகளில் விற்பனை செய்யப்படும் ரொட்டி, ரஸ்க் இனிப்பு, கார வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வணிக மோகத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் கட்டாயம் உடலுக்கு உபாதையை கொண்டவையாகவே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். துரித உணவகத்தில் வாங்கி உணவு சாப்பிட குழந்தைகளை பழக்கப்படுத்தாமல், வீட்டில் செய்து கொடுப்பதை சாப்பிட பழகவையுங்கள்.