Mobile Use by Child (Photo Credit: Pixabay)

மார்ச் 25, சென்னை (Health Tips): பிறந்து சில ஆண்டுகள் ஆன குழந்தைகள் முதல், வயதான பெரியவர்கள் வரை தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஸ்மார்ட்போனுக்கு பழக்கமாகி, பின்னாளில் (Children Mobile Watching) அதற்கு அடிமையாக ஆகின்றனர். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் குழந்தைகளுடன் பேசுவதை தவிர்த்துவிட்டு, தாங்களும் செல்போனை மும்மரமாக பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். இதனை கவனிக்கும் குழந்தைகளின் உலகமும் செல்போனாகிறது.

நாம் செய்வதை குழந்தைகள் செய்யும்: சமீபத்தில் காமன் சென்ஸ் மீடியா சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், 13 வயது முதல் 18 வயதுடைய இளைஞர் 50% ஸ்மார்ட்போனை எந்நேரமும் உபயோகம் செய்வது தெரியவந்துள்ளது. 18 வயது முதல் 24 வயதுள்ளவர்களில் 36% பேரும் ஸ்மார்ட்போன் பார்க்கிறார்கள். இவை அனைத்தும் குழந்தைகளுடன் இருப்பவர்கள் செல்போன் பார்ப்பதால் ஏற்படும் விளைவுகளால், அவர்களும் அதனை பார்க்க முனைகின்றனர் என்பதை உறுதி செய்கிறது. Genie First Look: அற்புத விளக்கில் இருந்து வரும் ஜெயம் ரவி.. ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

ஏழை-பணக்காரன் வேறுபாடு இன்றி ஒவ்வொரு வீட்டில் நடக்கிறது: சுட்டித்தனம் செய்து சுறுசுறுப்புடன் இருக்கும் குழந்தையை அமரவைப்பதில் தொடங்கி, சாப்பாடு ஊட்டுவது, அமைதியாக இருக்க வைப்பது என செல்போனை பெற்றோர்கள் கையில் எடுப்பதால், கொஞ்சம் விபரம் தெரிந்ததும் சிறுகுழந்தைகளும் அதனை பயன்படுத்தி பழகுகின்றனர். வசதி படைத்தோர், வசதி இல்லாத வீடு என்ற நிலை மாற்றமடைந்து ஸ்மார்ட்போன் அனைத்து விதமான குழந்தைகளின் கையிலும் தவழ்ந்து, அவர்களுக்கு இனிமையான பாடல்களும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Teen Girl Watching Mobile (Photo Credit: Pixabay)

செல்போன் வீடியோவில் அவர்களின் உலகம் முடிந்துவிடும்: தொழில்நுட்பங்கள் நிறைந்த உலகில் ஸ்மார்ட்போன் பயன்பாடு என்பது அத்தியாவசியமானது மற்றும் பலவற்றை தெரிந்துகொள்ள உதவுகிறது எனினும், அதனை அளவுடன் குழந்தைகளுக்கு வழங்குவதே சாலச்சிறந்தது. பிறந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி என்பது அதிகம் இருக்கும். அவர்கள் ஸ்மார்ட்போனில் மூல்கும் பட்சத்தில், அவர்களின் உலகம் அதற்குள் அடங்கிவிட்டும். 2 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போனை வழங்காமல், 3 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கல்விக்காக ஒருமணிநேரம் செல்போனை வழங்கலாம். 17 வயது வரை இருக்கும் குழந்தைகளுக்கு 2 மணிநேரம் மட்டும் கல்விக்காக கொடுக்கலாம். First Lunar Eclipse of 2024: 100 ஆண்டுகளுக்கு பின் வரும் சந்திர கிரகணம்.. எப்படி பார்ப்பது?.! 

சைல்ட் லாக் (Child Lock) உபயோகம் செய்யுங்கள்: குழந்தைகள் நம்மை விட்டு தனியே ஸ்மார்ட்போனை எடுத்துச்சென்று பயன்படுத்துகிறார்கள் என்றால் அதனை கண்காணிக்கவும் வேண்டும். இன்றளவில் சைல்ட் லாக் என்ற அமைப்பு மூலம், குழந்தைகள் செல்போனை உபயோகம் செய்தால் ஆபாச உள்ளடக்கங்கள் மறைக்கப்படும். அதனை பெற்றோர் குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் வழங்கும்போது ஏற்படுத்தி வழங்க வேண்டும். அவர்களின் முன்பு ஹிஸ்டரியை அழிப்பது போன்றவை செய்யக்கூடாது. இது அவர்களை கண்காணிக்க இயலாமல் போக வழிவகை செய்யும்.

பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்: குழந்தைகள் ஒருவேளை ஸ்மார்ட்போனில் மூழ்கினால் அவர்களின் பேச்சுத்திறன் என்பது வெகுவாக பாதிக்கப்படும். பிறர் பேசுவதை காதில் வாங்காமல், அதற்கு பதிலும் பேச தெரியாமல் அவதிப்படுவார்கள். இட்டால் பிற்காலத்தில் சிந்திக்கும் திறன் குறைந்து, சமூகத்துடன் வாழ தயங்குவார்கள். தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட்போனில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, குழந்தைகளின் கண்களையும் பாதிக்கும், நினைவுத்திறனை கேள்விக்குறியாக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. Viral Video: "சேதுபதி ஐபிஎஸ்" செந்தில் வேலையைச் செய்த உபி மக்கள்.. தண்டவாளத்தின் நடுவே ரயிலைத் தள்ளி அட்டூழியம்..! 

அவர்களின் எண்ணத்தை மாற்றுவது உங்கள் பொறுப்பே! குழந்தைகள் முன் இயன்றளவு ஸ்மார்ட்போனை உபயோகம் செய்யாமல் இருப்பது நல்லது. அவர்கள் முன்பு செல்போனை பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தினால் நலம். வீட்டில் இருந்து பணியாற்றுவோர், ஸ்மார்ட்போனை கையில் வைத்தவண்ணம் இருக்காமல், அவர்களின் கண்களுக்கு மறைவாக இருக்கும் வகையில் பார்த்துக்கொள்வது நல்லது.