PM Narendra Modi (Photo Credit: @ANI X)

மார்ச் 04, புதுடெல்லி (New Delhi): 2024 மக்களவை பொதுத்தேர்தல் இன்னும் 2 மாதங்களில் தொடங்கி நடைபெறவுள்ளதால், அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கி இருக்கிறது. அரசியல் கட்சிகளும் தங்களின் தேர்தல் வியூகத்துடன் விறுவிறுப்புடன் பிரச்சார பணிகளில் இறங்கி இருக்கின்றன. மத்தியில் தொடர்ந்து 2 முறை ஆட்சியை அமைத்த பாரதிய ஜனதா கட்சி, தனது தேசிய ஜனநாயக கூட்டணியை வெளிப்படுத்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சார பணிகளுக்கு இன்னும் பல நாட்கள் இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பல மாநிலங்களுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டு அடுத்தடுத்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதனால் பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

அதன்படி, இன்றில் தொடங்கி 10 நாட்களுக்குள் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி, 29 நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். தமிழ்நாடு, குஜராத், இராஜஸ்தான், உத்திரபிரதேசம் மேட்டரும் மேற்குவங்கம் என அவரின் பயணத்திட்டங்கள் அடுத்தடுத்து காத்திருக்கின்றன. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகளை வெற்றிபெறும் முனைப்புடன் தீவிர களப்பணி தொடருகிறது. US Shocker: நிதிஉதவி கேட்ட மாணவர்களை கால்களை நக்கவிட்டு கொடூரம்; அமெரிக்காவில் பகீர் சம்பவம்.! 

பிரதமர் மோடியின் பயண விபரங்கள் தேதி வாரியாக பின்வருமாறு.,

மார்ச் 04: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அடிலாபாத் நகரில் வளர்ச்சித்தங்கள் தொடங்குதல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் பொதுக்கூட்டம். அதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள கல்பாக்கம் வருகை, நலப்பணிகள் தொடக்கம், பாஜக பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுதல். இவை முடிந்ததும் ஹைதராபாத் பயணம்.

மார்ச் 05: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சங்கரெட்டியில் வளர்ச்சித்தங்கள் தொடங்குதல், முடிந்த திட்டங்களை நாட்டுக்கு அர்பணித்தல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டுதல், பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுதல். அதனைத்தொடர்ந்து ஒடிசாவில் உள்ள ஜாஜ்புர், சாண்டிகோளே நகரில் வளர்ச்சித்திட்டங்கள் தொடங்குதல், முடிந்த திட்டங்களை நாட்டுக்கு அர்பணித்தல், அடிக்கல் நாட்டுதல், பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுதல். இவை நிறைவடைந்ததும் மேற்குவங்கப்பயணம்.

மார்ச் 06: மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டுதல், முடிந்த திட்டங்களை நாட்டுக்கு அர்பணித்தல், பராசத் நகரில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுதல். பின் பீகாரில் பெட்டியா பகுதியில் வளர்ச்சிட்ட பணிகள் தொடங்குதல், நிறைவுற்ற திட்டங்கள் நாட்டுக்கு அர்பணித்தல், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது. Minor Girl Killed: பணிப்பெண்ணான 12 வயது சிறுமியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற பயங்கரம்; பணத்திமிரில் பதறவைக்கும் சம்பவம்.! 

மார்ச் 07: ஜம்மு காஷ்மீரில் இருக்கும் ஸ்ரீநகரில் புதிய வளர்ச்சித்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், நிறைவுற்ற பணிகளை நாட்டுக்கு அர்பணித்தல் நடைபெறுகிறது. பின் அங்கிருந்து டெலல்லியில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.

மார்ச் 08: டெல்லியில் நடைபெறும் முதல் தேசிய பாட்டாளி விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்கிறார். பின் அசாம் மாநிலம் பயணம் செய்கிறார்.

மார்ச் 09: அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள மேற்கு கமெங் சேலா சுரங்கப்பாதை திறப்பு, பீட்டா நகரில் வளர்ச்சித்திட்டங்களை நாட்டுக்கு அர்பணித்தல், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் நடைபெறுகிறது. பின் அங்கிருந்து அசாம் சென்று, ஜோர்ஹாட் லச்ஸித் புர்புகான் சிலைதிறப்பு, ஜோர்ஹாட்டில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கிவைத்தல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அங்கிருந்து மேற்குவங்கம் செல்லும் பிரதமர், சிலிகுரியில் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

மார்ச் 10: உத்திரபிரதேசம் மாநிலத்திற்கு பயணிக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அசம்கர் நகரில் நடைபெறும் நிகழ்வில் பல திட்டங்களை நாட்டுக்கு அர்பணிக்கிறார். Lemon Ginger Drink: உடல் எடையை குறைக்க நினைக்கிறீங்களா?.. கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும் இஞ்சி-எலுமிச்சை நீர்.! 

மார்ச் 11: டெல்லியில் உள்ள பூஸாவில் நமோ டிரோன் திதி, லக்பதி திதி நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். துவாரகா எக்ஸ்பிரஸ் வே-யின் ஹரியானா பகுதிகள் திறக்கப்படுகின்றன. மாலை நேரத்தில் டிஆர்டிஓ நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார்.

மார்ச் 12: குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதிக்கு செல்லும் பிரதமர், இராஜஸ்தானுக்கும் சென்று பல்வேறு நலப்பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். ஜெய்சால்மர் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பொக்ரானுக்கு செல்கிறார். Varalaxmi Engaged: விரைவில் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் பிரபல தமிழ் நடிகை; நிச்சயம் முடிந்தது.! 

மார்ச் 13: காணொளி வாயிலாக அசாம் மற்றும் குஜராத் மாநிலங்களில் நடைபெறும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்தங்கிய பிரிவினருக்கு அவுட்ரீச் திட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.

இவை அனைத்தும் மார்ச் 13ம் தேதி வரை பிரதமர் மோடியின் அடுத்தடுத்த பயணங்கள் ஆகும். பெங்களூரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, பிரதமரின் பயணத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.