Summer Season Hot Drinks (Photo Credit: Wallpaper Cave / Liquor.com)

ஏப்ரல் 21, (Health Tips): கோடைகாலத்தில் பொதுவாக பலருக்கும் உடலில் நீரிழப்பு, மயக்கம், தலைவலி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இவை உடல் சூட்டின் காரணமாக நமக்கு ஏற்படுகிறது. கோடை காலத்தில் நாம் இயற்கையான பழசாறுகளான இளநீர், நுங்கு, பதநீர், பழச்சாறுகள் போன்றவற்றை குடிப்பதால் கோடைகால பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். இந்த நேரத்தில் மதுபானம் அருந்தும் பழக்கமும் கைவிடக்கூடிய ஒன்றாக இருப்பது நலம்.

மதுபானம் என்பது கட்டாயம் மனிதனால் கைவிடப்பவேண்டிய பழக்கங்களில் ஒன்றாகும். ஆனால், அதனை கோடைகாலத்தில் அருந்துவது உடல் நலனை மேலும் கேள்விக்குறியாக்கும். இன்றளவில் மதுபானக்கடைகளில் பீர் மற்றும் ஹாட் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எவ்வித மெதுவாக இருந்தாலும், அவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. கோடையில் இவற்றை உட்கொண்டால் முதியவர்கள், இதய நோய் கொண்டவர்கள், நீரிழிவு பிரச்சனை இருப்போருக்கு உயிரே பறிபோகும் சூழ்நிலையும் ஏற்படலாம். Coimbatore Car Blast: கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் அதிரடி திருப்பம்; அதிபயங்கர குண்டு., என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையில் பகீர் தகவல்.!

நமது உடலில் இருக்கும் வெப்பத்தை விட, அதாவது நமது உடல் ஏற்றுக்கொள்ளும் உடல் வெப்பநிலையை விட கோடையில் உடல் அதிகளவு வெப்பத்தால் பாதிக்கப்படும். வெளிப்புற வெப்பம் உடலுக்குள் சென்று அதனை கேள்விக்குறியாக்கும். இதனால் ஏற்படும் மயக்கம், மூச்சு விடுதலில் சிரமம், கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனை போன்றவை அதிகரித்தால் கோடையில் ஹீட் ஸ்ட்ரோக் என்ற அதிவெப்ப பக்கவாதம் ஏற்படும்.

தான் மகிழ்ச்சியாக அல்லது கவலையாக இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்த மதுவை அருந்த வேண்டும் என்ற அவசியம் என்பது இல்லை. மதுபானம் வயதான பின்னர் மறதி பிரச்சனையை ஏற்படுத்தும். மூளையின் செயல்பாடுகளை குறைக்கும். மதுபானம் அருந்தும் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அதற்கான விளைவுகளை அவர்கள் கட்டாயம் சந்தித்தாக வேண்டும்.