Hemoglobin | Honey | Dry Fruits (Photo Credit: Pixabay)

அக்டோபர் 04, சென்னை (Health Tips): நமது உடலில் உள்ள ஹீமோகுளோபின், இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் புரதம் ஆகும். இப்புரதமே இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை வழங்குகிறது. அதேபோல, நுரையீரலில் இருந்து பிற உடல் பகுதிக்கு ஆக்சிஜனை எடுத்து செல்ல உதவி செய்கிறது.

ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், இரத்த சிவப்பணுக்கள் போதுமான அளவு வேலைகளை செய்யாமல், ஆக்சிஜனை எடுத்து சேலை சிரமப்பட்டு இரத்த சோகை பிரச்சனை ஏற்படும்.

உடலில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க, இன்று இயற்கை முறையிலான வைத்தியத்தை பார்க்கலாம். இதனை தேனில் ஊற்றி 24 மணிநேரம் ஊறவைத்து, தொடர்ந்து 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். Rishabh Pant Birthday: நண்பனின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்: மகிழ்ச்சியில் ரிஷப் பண்ட்..! 

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் - 6,

பேரிச்சம்பழம் - 100 கிராம்,

உலர் திராட்சை - 100 கிராம்,

அத்திப்பழம் - 100 கிராம்,

பாதாம் பருப்பு - 100 கிராம்,

பட்டை - 2 துண்டு,

இஞ்சி துருவியது - 3 துண்டு,

பாதாமி பழம் (ஆப்ரிகாட் பழம்) - 100 கிராம்,

செய்முறை:

முதலில் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வாங்கி, ஒன்றன் பின் ஒன்றாக காற்றே புகாத பாட்டிலில் சேர்க்க வேண்டும்.

பின் அவை தேனில் மூழ்கும் அளவு ஊற்றி, 24 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். இவை நன்கு ஊறியதும் தினமும் காலை நேரத்தில் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வரவேண்டும். Neeraj Chopra Wins Gold Medal: ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம், வெள்ளி வென்று இந்தியா சாதனா: நீரஜ் சோப்ரா அபார வெற்றி.!

இதனால் நமது உடலின் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். மருந்தகத்தில் விற்பனை செய்யப்படும் சிறப்புகளை தவிர்த்து, இதனை வீட்டிலேயே மேற்கொண்டால் 3 மாதத்தில் பலன் நிச்சயம் கிடைக்கும். உடல் நலம்பெறும்.