Corona Virus (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 05, ஹனோய் (Health Tips Tamil): கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கி, 2021இல் இருந்து இரண்டு ஆண்டுகள் உலகையே ஆட்டி வைத்த கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக தற்போது வரை பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. தடுப்பூசி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் கொரோனாவால் பல உலக நாடுகள் தங்களது நாட்டின் மக்களை இழந்தது. தடுப்பூசியின் பயன்பாடுகளை தொடர்ந்து கொரோனா கட்டுக்குள் வந்தது.

ஆய்வில் வெளிவந்த உண்மை: இந்நிலையில், சமீபத்தில் வியட்நாம் நாட்டில் உள்ள பெனிகா பல்கலைக்கழகம் சார்பில் லேசான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்ளாத நபர்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், லேசான கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுவதாக முடிவுகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேசான கொரோனா தொற்று பாதிப்பு: 18 வயதிற்கு உட்பட்ட 1,056 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், இவர்கள் லேசான கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாத சூழலில், இரவு நேரங்களில் தூக்கமின்மை பிரச்சனையை வெகுவாக எதிர் கொண்டுள்ளது உறுதியானது. D51 Update: ஆந்திராவில் படப்பிடிப்பு நிறைவு; மும்பை செல்லும் தனுஷின் டி51 படக்குழு.! 

உறக்கம் சார்ந்த பிரச்சனைகள்: சோதனை நடத்தப்பட்டதில் 76.1 விழுக்காடு நபர்கள் தூக்கமின்மை பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர். 22.8% பேர் அதீத தூக்கமின்மை பிரச்சனையையும் எதிர்கொண்டுள்ளனர். இவர்களில் பாதி பேர் இரவு நேரத்தில் திடீரென விழிப்பது, உறக்கமின்மையால் அவதிப்படுவது, குறைந்த நேர உறக்கம் போன்ற பிரச்சனையை சந்தித்துள்ளனர்.

செய்யவேண்டியது என்ன? இவ்வாறான விஷயங்களை தடுக்க உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும், உறக்கம் வருவதற்கு முன் இளம் சூடுள்ள நீரில் குளிப்பது, படுக்கைக்கு செல்லும் முன்பே தொலைபேசியை அணைத்து வைப்பது, காபி போன்ற பொருட்களை தவிர்ப்பது நல்லது என ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காண்பிக்கின்றனர்.

சரியாகும் முந்தைய கணிப்புகள்: முன்னதாக கொரோனா பரவலின்போதே, கொரோனா நம்மை விட்டு நீக்கினாலும் அதன் தன்மையை பொறுத்து நீண்டகால பிரச்சனைகளை மக்கள் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு பின் மாரடைப்பு, உறக்கமின்மை உட்பட பல்வேறு உடல்நல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நாம், அதனை அலட்சியமாக கருதாமல் மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது.