Respective: Blood Red Cells - Heart Attack

டிசம்பர், 11: தனி ஒருவருக்கு ஏற்படும் மாரடைப்பிற்கும் (Heart Attack), இரத்த வகைக்கும் (Blood Group) நெருங்கிய தொடர்பானது உள்ளது என்பது ஆய்வுகளின் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓ இரத்த வகை அல்லாத நபர்களுக்கு மாரடைப்பு அபாயமும் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த விஷயம் குறித்து 4 இலட்சத்திற்கும் அதிகமானோரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில் ஏ அல்லது பி இரத்த வகை கொண்ட நபர்களுக்கு, ஓ இரத்த வகை கொண்டுள்ளவர்களை விடவும் மாரடைப்பு அபாயம் 8 மடங்கு அதிகளவு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் நடைபெற்ற ஆய்வில் 13 இலட்சத்திற்கும் அதிகமானோரிடம் கடந்த காலங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. BenefitsOfBrinjal: அடடே. கத்தரிகாயில் இருக்கும் அசத்தல் நன்மைகள் இவ்வுளவா?.. இன்றே தெரிந்துகொள்ளுங்கள்.! 

அதன்படி, ஓ இரத்த வகை இல்லாமல் பிற இரத்த வகைகள் கொண்டவர்களுக்கு மாரடைப்பு அபாயம் 9 % அதிகரித்து இருப்பது அம்பலமானது. ஏ & பி வகையை ஓ வகையுடன் ஒப்பிடுகையில் பி இரத்த வகை கொண்டவர்களுக்கு பிறரை விட மாரடைப்பு அபாயம் அதிகம் இருந்துள்ளது.

ஓ இரத்த வகையுடன் ஏ இரத்த வகை கொண்டவர்களுக்கு இதயத்தின் செயலிழப்பு அபாயம் அதிகரித்துள்ளது உறுதியானது. மாரடைப்பு இரத்த கட்டிகளால் தமனியில் செயல்பாடுகளை தடுக்கும் போது ஏற்படுகிறது. ஆய்வுகளின் முடிவின் படி ஓ வகை இரத்தம் இல்லாதவர்களுக்கு இதய செயலிழப்பு அல்லது மாரடைப்பு அபாயம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 06:05 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).