டிசம்பர் 28, புதுடெல்லி (New Delhi): குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda BOB), இந்தியாவிலேயே பாரத் ஸ்டேட் வங்கிக்கு பின்னர் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். 9,693 கிளைகளுடன் 74,227 க்கும் அதிகமான பணியாளர்களுடன் பேங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது. இதனிடையே, 2025ம் ஆண்டுக்கான மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை பேங்க் ஆப் பரோடா வெளியிட்டு இருக்கிறது. வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது:
1267 மேலாளர்கள் உட்பட பிற பொறுப்புகளில் (Bank of Baroda Recruitment) பணியாற்ற, டிசம்பர் 28, 2024 முதல் 17 ஜனவரி 2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்காக பேங்க் ஆப் பரோடாவின் bankofbaroda.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். பதிவேற்றப்பட்ட விண்ணப்பத்தை பிப்ரவரி 02, 2025 க்குள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். TN Govt Jobs: 10 வகுப்பு போதும்.. சத்துணவு துறையில் காலிப்பணியிடங்கள்; 8,997 பேருக்கு வேலைவாய்ப்பு.!
காலிப்பணியிடங்கள் விபரம்:
கிராமப்புற வேளாண் வங்கி கிளைகளில் 200 பணியிடங்கள், சில்லறை பொறுப்புகளில் 450 பணியிடங்கள், MSME வங்கிகளில் 341 பணியிடங்கள், தகவல் பாதுகாப்பு பிரிவில் 9 பணியிடங்கள், வசதி மேலாண்மை பிரிவில் 22 பணியிடங்கள், கார்ப்பரேட் நிறுவன கடன் பிரிவில் 30 பணியிடங்கள், நிதித்துறையில் 13 பணியிடங்கள், தகவல் தொழிநுட்பத்தில் 177 பணியிடங்கள், நிறுவன தரவு மேலாண்மை அலுவலகத்தில் 25 பணியிடங்கள் இருக்கின்றன.
தேர்வு செய்யப்படும் முறை:
அந்தந்த வேலைக்கான கல்வி வரம்புகள் பேங்க் ஆப் பரோடாவின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக 150 கேள்விகள் 225 மதிப்பெண்களுக்கு கொடுக்கப்படும். இதற்கான கால அளவு 150 நிமிடங்கள். ஆங்கில மொழி புரிதலுக்காக தேர்வும் நடைபெறும்.
பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். எஸ்.சி., எஸ்.டி மற்றும் பெண்களுக்கு ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது. இந்த கட்டணம் வேலைக்கு தேர்வு செய்யப்படவில்லை என்றாலும், திரும்பி தரப்படாது.
பேங்க் ஆப் பரோடா வங்கியின் இணையப்பக்கத்தில் சோதிக்க: https://ibpsonline.ibps.in/bobsodec24/
பேங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை இங்கு பார்க்கவும்: https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2024/24-12/Advertisement-Regular-27-12-2024-26-20.pdf