Sexual Abuse | Harassment Representational Picture (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 05, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள பள்ளியில், 15 வயதுடைய மாணவி பயின்று வந்துள்ளார். கடந்த ஜனவரி 15 அன்று சிறுமி திடீரென வாந்தி எடுத்து மயங்கி இருக்கிறார். இதனால் அதிர்ந்துபோன சிறுமியின் தந்தை மகளை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்கு அனுமதி செய்துள்ளார். அங்கு சிறுமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பதும், பலரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள கொடுமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் அடைத்துவைத்து பாலியல் பலாத்காரம்: இந்த தகவலை கேட்டு அதிர்ந்துபோன சிறுமியின் தந்தை சிறுமியிடம் விசாரித்துள்ளார். அப்போது சிறுமி தனது பூ வியாபாரியான அத்தை வீட்டிற்கு விடுமுறைக்கு சென்றபோது நடந்த கொடூரத்தை விவரித்து இருக்கிறார். குன்றத்தூர், வேளச்சேரி ஆகிய இடங்களில் உள்ள வீடுகளில் சிறுமியை அடைத்துவைத்து பலரால் பலாத்காரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் தந்தை மீது பொய் புகார்: இதனால் வென்குண்டெழுந்த சிறுமியின் தந்தை, தனது தங்கையை வீட்டிற்கு அழைத்துவந்து மகளின் வாழ்க்கையை சீரழித்துவிட்டாயே என ஆத்திரத்தில் தாக்கி இருக்கிறார். அண்ணனை வழக்கில் சிக்கவைத்து வாயை அடைக்க நினைத்த தங்கை, கண்ணகி நகர் காவல் நிலையத்தில் சகோதரர் தன்னை தாக்கியதாக புகார் அளித்துள்ளார். Madurai Shocker: "அடிச்ச போதை பத்தலை, காசு கொடு" - தாயை கொடூரமாக கொன்ற மகன்.. கடைசி விவசாயி திரைப்பட புகழ் நடிகைக்கு சோகம்.! 

Women Abuse | Feeling Sad File Pic (Photo Credit: Pixabay)

அதிகாரிகளின் அலட்சியத்தால் சிறைவாசம்: புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுமியின் தந்தையை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அப்போது, தனது மகளுக்கு நேர்ந்த அநீதிகளை கண்ணீர்பட விவரித்து இருக்கிறார். இதனை ஏற்றுக்கொள்ளாத அதிகாரிகள், சிறுமியின் தந்தையை சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 12 நாட்கள் சிறை வாசத்திற்கு பின்னர் வெளியே வந்த சிறுமியின் தந்தை, நேரடியாக கோயம்பேடு காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று நேரடியாக துணை ஆணையரிடம் விபரத்தை தெரிவித்துள்ளார்.

உயர் அதிகாரியின் உத்தரவால் அம்பலமான உண்மை: இதனால் உடனடி விசாரணை நடத்த உத்தரவிட, கோயம்பேடு மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியை அவரின் அத்தை ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் பணத்திற்கு விற்பனை செய்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர் 5 நாட்கள் வேளச்சேரியில் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். அத்தையின் தோழிகள் துர்கா மற்றும் காயத்ரி ஆகியோர் போரூர், குன்றத்தூர் பகுதியில் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியுள்ளனர்.

மூவர் கைது, எஞ்சியோருக்கு வலைவீச்சு: விசாரணையில் உண்மையை அறிந்த காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழகுப்பந்து சிறுமியின் அத்தை தேன்மொழி, அவரின் தோழிகள் துர்கா, காயத்ரி ஆகியோரை கைது செய்தனர். ஆட்டோ ஓட்டுநர் உட்பட பிற நபர்களுக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். சிறுமியின் தந்தை கண்ணகி நகர் காவல் துறையினரிடம் மகளுக்கு நடந்ததை கூறியும், அவர்கள் விசாரிக்காமல் அலட்சியப்படுத்தியது தொடர்பாகவும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.