Female Rider (Photo Credit: @venom1s X)

செப்டம்பர் 06, சென்னை (Chennai): விபத்து ஏற்படும் பொழுது ஆண் பெண் இருவர் சம்பந்தப்பட்டிருந்தால் உடனடியாக அந்த ஆணின் மேல் தான் தவறு என்று கூட்டம் கூடுவது இந்திய அளவிலேயே சர்வ சாதாரண விஷயமாக மாறி உள்ளது. அந்த வகையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை ஒரு ஆண் பெண்ணின் இரு சக்கர வாகனம் இடிக்கின்றார். அதற்குக் காரணம் அப்பெண் தான். இண்டிகேட்டர் எதுவும் போடாமல் திடீரென வண்டியை ஓரம் கட்டியுள்ளார். இந்த விபத்து முடிந்த உடன் அந்த இடத்தில் கூடிய கூட்டம் அனைத்தும் அந்த ஆண் நபரை திட்டுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் தன்னுடைய வாகனத்தின் முன் பகுதியில் கேமரா பொருத்தியதினால் தான் தவறு செய்யவில்லை என்பதனை நிருபிக்கிறார். Tata Curvv Coupe SUV: டாடா கர்வ் பெட்ரோல், டீசல் இன்ஜின் கார்களின் விலை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

பெண்களுக்காக சில டிப்ஸ்:

  • எப்போதுமே டூவீலர் எடுத்தோமா, ஓட்டினோமா என்றில்லாமல் டூவீலர் ஓட்டும் பெண்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். பைக் ஓட்டும்போது அடிக்கடி சடன் பிரேக் போடுவது தவறு.
  • ஆக்ஸிலரேட்டரை விட்டால் வண்டி வேகம் குறையும் என்று யோசிக்காதது. அதிக பதட்டத்தில் கீழே விழுந்தவுடன் அளவுக்கு அதிகமாக பதட்டம் அடைய கூடாது.
  • முதலில் யாரும் இல்லாத கிரவுண்டில் வேகமாக ஒட்டவேண்டும். 8 போட்டு பழக வேண்டும்.
  • ஆக்ஸிலரேட்டரை விட்டுவிட்டு கூட்ட கூடாது.10கிமீ வேகத்தை தொடாமல் ஓட்ட வேண்டும். அதாவது சைக்கிள் வேகம். அந்த வேகத்தில் வண்டியை கட்டுப்படுத்துவது தான் பெண்களுக்கு சிரமம்.
  • வளைவுகளில் திரும்புப்போது கண்டிப்பாக இண்டிக்கேட்டர்களை போடுங்கள். எதிரில் வண்டிவந்தால் லைட்டை ப்ளிங்க் செய்யுங்கள்.

இண்டிகேட்டரில் அலப்பறை செய்துவிட்டு நாடகமாடிய பெண்: