ECR Accident: நின்றுகொண்டு இருந்த லாரி மீது மோதி பயங்கரம்; தலை சிதறி நால்வர் பலி.. சென்னையில் சோகம்.!

பாண்டிச்சேரிக்கு அதிவேகமாக காரில் சென்றவர்கள், நின்றுகொண்டு இருந்த லாரியின் மீது மோதி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ECR Accident: நின்றுகொண்டு இருந்த லாரி மீது மோதி பயங்கரம்; தலை சிதறி நால்வர் பலி.. சென்னையில் சோகம்.!
Chennai ECR Accident on 04 Sep 2024 (Photo Credit: @pudukkottai_pag X)

செப்டம்பர் 04, கோவளம் (Chennai News): சென்னையில் உள்ள கோவளம் (Covelong) பகுதியில் இன்று நடந்த பயங்கர சாலை விபத்தில், 4 பேர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி பயணித்த கார், அதிவேகத்தில் சென்றதாக தெரியவருகிறது. இந்த கார் இன்று காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் (Kovalam) பகுதியில் சென்றுகொண்டு இருந்தது. அச்சமயம், சாலையோரம் ஈசர் லாரி ஒன்று பழுதாகி நின்றுகொண்டு இருந்த நிலையில், கார் அதிவேகத்தில் பயணித்தபோது, லாரி நிற்பது தெரியாமல் கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. 3-Year-Old Boy Dies: 3 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து பலி; 10 நிமிடமாக துடிதுடித்த உயிர்.! 

காரின் மேல்புறம் நொறுங்கி சோகம்: 

லாரியின் பின்புறம் கார் பாய்ந்து சொருகி நின்றது. இந்த விபத்தில் காரின் மேல்பாகம் முற்றிலும் சிதைந்தது. இதனால் காரில் பயணம் செய்த நால்வரும் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், விபத்தில் பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் சிக்கியவர்கள் யார்? என்ற விசாரணையும் நடந்து வருகிறது.

முதற்கட்ட விசாரணையில், இவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி பயணம் செய்வது உறுதி செய்யப்பட்டது.

(The above story first appeared on LatestLY on Sep 04, 2024 08:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).