Tharamani College Girl Abuse Case (Photo Credit: @AnandVijay1999 X / Pixabay}

மார்ச் 26, தரமணி (Chennai News): சென்னையில் உள்ள தரமணி (Tharamani) பகுதியில், அரசு தர்மாம்பாள் மகளிர் பாலிடெக்னீக் (Chennai Polytechnic College Girl Rape Case) கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் விடுதியும் இருக்கும் நிலையில், வெளிமாவட்டத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுமிகள் இங்கு பயின்று வருகின்றனர். சிறுமிகள் இருவரும் தோழிகள் என்பதால், அவ்வப்போது வெளியே சென்று வருவது வழக்கம். இந்த சிறுமிகளில் ஒருவர் இன்ஸ்டாகிராம் செயலியை உபயோகம் செய்யும் பழக்கம் கொண்டுள்ளார். இதன் வாயிலாக பல ஆண் நண்பர்களிடமும் ஆன்லைனில் (Instagram Friend) உரையாடி வந்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை (Sexual Abuse):

இதனிடையே, கடந்த மார்ச் 20 அன்று இரண்டு சிறுமிகளும் வெளியே சென்ற நிலையில், கிண்டி பாலத்தில் சிறிது நேரம் இருந்த சிறுமிகளின் ஒருவர் விடுதிக்கு திரும்பிவிட்டார். மற்றொரு சிறுமி அன்று இரவில் விடுதிக்கு வராமல், மறுநாள் சோர்வுடன் வந்துள்ளார். இதனால் அவரிடம் சக தோழிகள் விசாரித்தபோது, அவர் எதுவும் கூறவில்லை. பின் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இவ்விசயம் குறித்து கல்லூரி அளவில் விசாரித்த நிர்வாகத்தினர், பாதிக்கப்பட்ட மாணவிக்கு மாற்று சான்றிதழ் கொடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது. Heart Wrenching Video: மனமெல்லாம் பதறுதே.. 12 சிசுக்களின் சடலம் கண்ணாடி பாட்டிலில் கண்டெடுப்பு.. குப்பையுடன் குப்பையாக அவலம்.! 

மாணவர்கள் அமைப்பு போராட்டம் (SFI Protest in Chennai Tharamani):

மேலும், மற்றொரு சிறுமியை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தகவல் அறிந்த இந்திய மாணவர் சங்கத்தினர், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிகேட்டு போராட்டம் நடத்தினர். மேலும், மாணவி 7 பேர் கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அந்த விஷயத்தை கல்லூரி நிர்வாகம் மூடி மறைந்துள்ளது எனவும் பகிரங்க குற்றசாட்டை முன்வைத்து இருந்தனர். மாணவர் சங்கத்தினர் போராட்டத்தின்போது, எஸ்எப்ஐ நிர்வாகிகள் - காவல்துறை இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், விஷயம் ஊடகங்களில் வெளியாகி மாணவிக்கு நடந்த அநீதி அம்பலமானது. இதனையடுத்து, தகவல் அறிந்த குழந்தைகள் நலத்துறையின், மாணவிக்கு 16 வயதே ஆவதால் விசாரணை நடத்தினர்.

தேடுதலில் ஆட்டோ ஓட்டுநர் (Auto Driver Suspected):

விசாரணையில், முதற்கட்டமாக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டதாக தரமணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, அதன்பேரில் போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. மாணவி இன்ஸ்டாகிராமில் அறிமுகமான ஆண் நண்பரின் அறைக்கு சென்றதாகவும், அங்கு வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. மாணவி உண்மையில் ஆட்டோ ஓட்டுனரால் மட்டும் வன்கொடுமை செய்யப்பட்டாரா? கூட்டுப் பாலியல் வன்கொடுமையை எதிர்கொண்டாரா? எனவும் விசாரணை நடக்கிறது.

அண்ணா பல்கலை.,யைத் தொடர்ந்து அதிர்ச்சி:

இந்த சம்பவம் மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே அண்ணா பல்கலை., மாணவி பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டது குறித்த விஷயம் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருந்தது. இதுகுறித்து நீதிமன்றத்தின் கண்காணிப்பின் பேரில் சிறப்பு குழு விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, தரமணி பாலிடெக்னீக் கல்லூரி மாணவி, ஆட்டோ ஓட்டுனரால் வன்கொடுமை செய்யப்பட்டதாக விசாரணை நடந்து வருகிறது.