Delhi Metro Youth Liqour Drinking Case (Photo Credit: @mittal68218 X)

ஏப்ரல் 07, டெல்லி (Delhi News): இந்தியாவின் தலைநகர் டெல்லியில், மக்களின் அத்தியாவசிய போக்குவரத்து சேவையை வழங்க மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சேவை மிகப்பெரிய அளவில் உதவி செய்கிறது. இதனிடையே, அவ்வப்போது டெல்லி மெட்ரோவில் பயணம் செய்யும் நபர்களில் சிலர் சர்ச்சைக்குரிய வகையில் செயல்படுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பெண்கள் கவர்ச்சியுடன் பயணம் செய்தது, காதல் ஜோடி தனிமையில் செய்யவேண்டியதை பொதுஇடத்தில் செய்தது என பல குற்றங்கள் நடந்துள்ளன. இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுவோரை இன்று வரை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை. இறைவா என்ன கொடுமை இது? சாலையை அலட்சியமாக கடந்தவர்களுக்கு நேர்ந்த விபரீதம்.. அதிரவைக்கும் காட்சிகள்.! 

மெட்ரோ பயணத்தில் மினி பார்:

இந்நிலையில், டெல்லி மெட்ரோவில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், இரயில் பயணத்தின்போதே சாவகாசமாக மதுபானம் அருந்தினார். கையில் முட்டையும் கொண்டு வந்திருந்தவர், சைடிஸை முதலில் தோல் உரித்து வைத்துக்கொண்டார். பின் கிளாசில் சரக்கை ஊற்றிக்குடித்தார். இதுதொடர்பான காட்சிகள் வெளியாகி, இலங்கரின் செயலுக்கு கண்டனம் குவிந்து வருகிறது.

இளைஞரின் அதிர்ச்சி செயல் குறித்த காணொளி: