Monkey on Hospital Ward (Photo Credit: Twitter)

செப்டம்பர் 11, டெல்லி (Social Viral): வடமாநிலங்களில் உள்ள பெரும்பாலான இடங்களில் குரங்குகளின் சேட்டை என்பது அதிகமாகவே இருக்கிறது. டெல்லி, உத்திரபிரதேசம் என நாட்டின் முக்கியமான மாநிலங்களில், குரங்குகள் செய்யும் சேட்டைகள் சொல்லியும் தீராதது.

இவை அவ்வப்போது மனிதர்களையும், தெரு நாய்களையும் குறிவைத்து தாக்கிய சம்பவமும் நடந்தது. இதனை கட்டுப்படுத்த மக்கள் தங்களின் வீடுகளில் இரும்பு வேலிகளை அமைத்து கூண்டுகள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்குள் குரங்கு ஒன்று நுழைந்துவிட்டது. Thalaivar 171 Update: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜுடன் இணையும் ரஜினிகாந்த்; அதிகாரபூர்வ அறிவிப்பு.! ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்..!

அவசர சிகிச்சை தனிப்பிரிவில் குரங்கு நுழைந்ததால் பதறிப்போன மருத்துவர்கள், தடியை எடுத்து குரங்கை அங்கிருந்து விரட்டி அடித்தனர். நல்வாய்ப்பாக குரங்கு ஏதேனும் சேட்டை காண்பிக்கவில்லை என்பதால், விபரீதம் தவிர்க்கப்பட்டது. இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.