Removed Mutton Bone (Photo Credit: @TheSaisatDaily X)

மே 15, ஹைதராபாத் (Hyderabad News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், கக்கிரேன் கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீராமுலு (வயது 66). இவர் கடந்த சில வாரங்களாகவே அல்சர் உட்பட பல்வேறு உடல்நல கோளாறு காரணமாக கடுமையாக பிரச்சனைகளை சந்தித்துள்ளார். இதற்காக மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை பெற்றும் பலனில்லை.

உணவுக்குழாயில் இறைச்சி எலும்பு: இதனையடுத்து, அங்குள்ள எல்.பி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் காமினேனி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாகியுள்ளார். அங்கு மருத்துவர்கள் உடலில் எண்டோஸ்கோபி செய்து பார்த்தபோது, முதியவரின் உணவுக்குழாயில் ஆட்டு இறைச்சி எலும்பு ஒன்று சிக்கி இருந்தது கண்டறியப்பட்டது. இதயத்திற்கு நெருக்கமான இடத்தில் எலும்பு சிக்கிக்கொண்டுள்ளது. Heat Wave in Asian Countries: மிகப்பெரிய வெப்ப அலை சவாலை எதிர்கொள்ளப்போகும் ஆசிய நாடுகள்; விஞ்ஞானிகள் கூறும் எச்சரிக்கை.! 

எலும்பின் அளவு 3.5 செ.மீ அளவு இருக்கலாம் என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மருத்துவர்கள் சாதுர்யமாக செயல்பட்டு எலும்பை வெளியே எடுத்தனர். இந்த நிலை தொடர்ந்து இருந்தால் மிகப்பெரிய அறுவை சிகிச்சைக்கு காரணமாக அமைந்திருக்கும் என்று கூறும் மருத்துவர்கள், உள்ளூர் கிளீனிக்கில் அல்சர் என நினைத்து அதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டதாகவும், பின் எண்டோஸ்கோபி செய்தபோது எலும்பு சிக்கியது உறுதி செய்யப்பட்டது என்றும் கூறுகின்றனர்.