மே 12, ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir News): ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அங்குள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பயங்கரவாதிகளை எதிர்த்து போராட இராணுவம் முழு அளவிலான படைபலத்துடன் செயல்பட்டு வருகிறது. அவ்வப்போது எல்லைதாண்டி வரும் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள், இந்திய மண்ணுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியும் வருகின்றனர்.

தற்போது 2024 மக்களவை பொதுத்தேர்தல் நடைபெறும் நிலையில், எல்லை அதிக கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. தேர்தலை சீர்குலைந்து சதிச்செயலை அரங்கேற்றவும் பயங்கரவாதிகளிடம் திட்டம் இருக்கும் என்பதால் அதிகாரிகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். Elder Man Killed: 20 வயது திருநங்கையால் வயதான நபர் கொடூர கொலை; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!

இந்நிலையில், நேற்று எல்லை தாண்டி வந்த 6 பயங்கரவாதிகள், அங்குள்ள உதம்பூர் மாவட்டம், பசந்த்கர்க் பகுதியில் பாதுகாப்பு காவலாளி ஒருவரை சுட்டுக் கொலை செய்துவிட்டு வனப்பகுதிக்குள் சென்று மறைந்தனர். இந்த விஷயம் தொடர்பாக தற்போது மாநில காவல் துறையினர் மற்றும் இராணுவம் ஆகியவை விசாரித்து பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியாகியுள்ளது.