ஜனவரி 01, ஜார்கண்ட் (Jharkhand News): சாலைகளில் பயணம் செய்யும்போது, சாலை விதிகளை கடைபிடித்து பயணிக்க வேண்டியதன் அவசியத்தை விழிப்புணர்வுகளாக ஏற்படுத்தினாலும் பலன் இல்லை. அவற்றை அலட்சியமாக எண்ணி செயல்படும்போது நடக்கும் விளைவால் மரணமோ, உயிருக்கு ஆபத்தான நிலைமையோ மட்டுமே எஞ்சி இருக்கும்.
காலையில் நடந்த பயங்கரம்: ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள அதியாப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள், இன்று காலை தங்களின் காரில் பயணம் செய்துகொண்டு இருந்தனர். இவர்களின் கார் ஜாம்ஷெட்பூர் (Jamshedpur Crash) பகுதியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டியின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலைத்தடுப்பில் இருந்த மரத்திற்கு அருகே மோதி பயங்கர விபத்தில் சிக்கியது. காலை 05:15 மணியளவில் நடந்த விபத்தில், 6 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். Japan Earthquake and Tsunami Warning: ஜப்பானில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலநடுக்கம்; சுனாமி தாக்கியது... பதைபதைப்பு காட்சிகள் வெளியானது.!
8 பேரில் 6 பேர் பலி: காரில் மொத்தமாக 8 பேர் பயணம் செய்த நிலையில், அவர்களில் 5 பேர் நிகழ்விடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்தார்.
காவல்துறையினர் விசாரணை: எஞ்சிய இரண்டு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஜாம்செட்பூர் காவல் துறையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் யார்? எங்கிருந்து எங்கு சென்றார்? எதனால் விபத்து ஏற்பட்டது? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
#WATCH | Jharkhand: 6 people died in a road accident in Jamshedpur after their car went uncontrolled and hit the divider. pic.twitter.com/Tm5Ju6MJ7V
— ANI (@ANI) January 1, 2024