மார்ச் 08, ஹம்பி (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பல் மாவட்டம், ஹம்பி பகுதியில் 27 வயதுடைய இஸ்ரேலிய சுற்றுலா பயணி உட்பட 2 பெண்கள் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் சானாபூர் ஏரிக் கரையோரத்தில், இரவு சுமார் 11 மணியளவில் பாடல்கள் கேட்டு ரசித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, 27 வயது வெளிநாட்டு பெண்மணி, 29 வயது உள்ளூர் பெண்மணி என இருவரும் இருந்தபோது, அங்கு வந்த ஒடிசா, மகாராஷ்டிரா மாநிலம் என சில நபர்கள் 4 முதல் 6 நபர்கள் சேர்ந்து இருவரையும் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்தனர். US President Warning: உக்ரைன், ரஷிய நாடுகளுக்கு உச்சகட்ட எச்சரிக்கை.. போரை நிறுத்தி பேச்சுவார்த்தையை தொடங்க அமெரிக்கா அறிவுறுத்தல்.!
கூட்டுப்பாலியல் பலாத்காரம்:
இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல், தங்களின் வாகனத்தில் பெட்ரோல் காலியாகிவிட்டது, அருகில் பெட்ரோல் பங்க் இருக்கிறதா? என வழி கேட்பது போல நடித்து, பெண்கள் தனியாக இருப்பதை உறுதி செய்து அத்துமீறிய சம்பவம் நடந்துள்ளது. ஒருகட்டத்தில் இஸ்ரேலிய பெண்மணி கும்பலை எதிர்த்து தாக்கியதில், இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் தெலுங்கு, கன்னடா, ஒடியா மொழி பேசி இருக்கின்றனர். பெண்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த நபர்களின் மீது தாக்குதல் நடத்தி கும்பல் தப்பிச் சென்றுள்ளனர். தற்போது பெண்கள் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனிப்படை அதிகாரிகள் விசாரணை:
பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மொத்தமாக 6 பேர் கும்பல் இக்குற்றச் செயலில் ஈடுபட்டதாகவும் முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. இந்த விஷயம் தொடர்பான மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.