Krishnagiri Fort Rape Case (Photo Credit: @Dheeran1991 X)

பிப்ரவரி 22, கிருஷ்ணகிரி (Krishnagiri News): கிருஷ்ணகிரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து, உறவினரின் வீட்டிற்கு நள்ளிரவில் நடந்து சென்ற நபரின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி பணம் மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் நடந்தது. இதுதொடர்பாக வெளியான சிசிடிவி கேமிரா மற்றும் புகாரின் பேரில், அதிகாரிகள் கைது செய்து 3 பேர் கொண்ட சிறார் கும்பலை கைது செய்து இருந்தனர். இதனிடையே, கிருஷ்ணகிரி மலை மீதுள்ள தர்காவுக்கு சென்று வந்த பெண், 4 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அவலம் நடந்துள்ளது. இறுதியில் அதிகாரிகள் குற்றவாளியை சுட்டுப்பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

பெண்ணின் நகை & பணம் பறிப்பு:

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் பின்புறம் இருக்கும் கோட்டை மலை மீது, தர்கா உள்ளது. தர்காவில் இறைவனை பிரார்த்தனை செய்ய, கடந்த பிப்.19 அன்று, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண், 30 வயதுடைய பெண் சென்றுள்ளனர். இருவரும் பிரார்த்தனை செய்துவிட்டு, வெயிலின் தாக்கத்தால் அங்கேயே காத்திருந்தனர். பிற்பகல் சுமார் 3 மணியளவில் அங்கு மதுபோதையில் இருந்த 4 பேர் கும்பல் வந்துள்ளது. அவர்கள் இருவரையும் கத்தி முனையில் மிரட்டி பெண்ணின் தங்க நகை மற்றும் கையில் இருந்த பணம் ஆகியவற்றை புரிந்துகொண்டது. மேலும், ஜிபே-வில் ரூ.7000 தொகையையும் பெற்றுக்கொண்டுள்ளது. Gnanasekaran Case Update: கொள்ளை பணத்தில் பிரியாணி கடை, உல்லாச வாழ்க்கை.. ஞானசேகரன் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.! 

தகவலை விசாரித்து துப்பு துலக்கிய காவல்துறை:

மேலும், அந்த கும்பல் பெண்ணை கத்தி முனையில் மிரட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டி அனுப்பி வைத்துள்ளது. இதனால் கலங்கிப்போன பெண்மணி மற்றும் அவருடன் வந்தவர், அழுதபடி மலையில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளனர். இருவரையும் கவனித்த அங்கிருந்தவர்கள் விசாரித்தபோது, தங்களுக்கு நடந்ததை கண்ணீருடன் விவரித்துவிட்டு புறப்பட்டுச் சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை. இந்த தகவல் கொஞ்சம் கொஞ்சமாக காவல்துறையினரின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, தனிப்படை அமைத்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகள் உத்தரவிட்டார்.

நால்வர் கும்பல் கைது:

இந்த உத்தரவின் பேரில் நடந்த விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் விபரம் தெரியவந்தது. பெண்ணிடம் நேரடி வாக்குமூலத்தை பெற்ற அதிகாரிகள், அதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் குற்றத்தில் ஈடுபட்டது கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் வசித்து வரும் கலையரசன் (21), அபிஷேக் (20), சுரேஷ் (22), நாராயணன் (21) என்பது தெரியவந்தது. இவர்களில் கலையரசன், அபிஷேக் ஆகியோர் என்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

ஒருவன் சுட்டுப்பிடிப்பு, மற்றொருவனுக்கு மாவுக்கட்டு:

தலைமறைவான சுரேஷ் மற்றும் நாராயணன், நேற்று இரவில் கிருஷ்ணகிரி பொன்மலைக்குட்டை பெருமாள் கோவில் பின்புறம் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்களை சுற்றி வளைத்தனர். அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டவர்கள் காவலர்கள் குமார், விஜயகுமாரை கத்தியால் தாக்கி இருக்கின்றனர். இதனால் பாதுகாப்பு கருதி துப்பாக்கிசூடு நடத்தப்பட்ட நிலையில், சுரேஷின் வலது காலில் சுட்டு அவர் பிடிக்கப்ட்டர். தப்பியோடிய நாராயணன் கீழே விழுந்து இடது கால்களை முறித்துக்கொண்டார். காயமடைந்த இரண்டு காவலர்கள் மற்றும் 2 குற்றவாளிகள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர்.