ஜூன் 23, கிருஷ்ணகிரி (Krishnagiri News): நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜயின் பிறந்தநாள் (Vijay Birthday) நேற்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி நகரத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வந்தன. இதனிடையே நேற்று மாலை நேரத்தில் கீழ்புதூர் பகுதியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இரண்டு பேர் காரில் பிறந்தநாள் கொண்டாட வந்துள்ளனர்.
இரு தரப்பினரிடையே மோதல் :
அந்தப் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் கொடிகளை ஏற்றி மரக்கன்று நடுவதற்கு முற்பட்டுள்ளனர். அச்சமயம் அதே பகுதியைச் சேர்ந்த கிளை தலைவர் விஜய் என்ற நாகராஜ், இது எனது பகுதி தகவல் தெரிவிக்காமல் இங்கு வந்து திடீரென நிகழ்ச்சி நடத்த காரணம் என்ன? என வாக்குவாதம் செய்துள்ளார். அச்சமயம் புதிய பாஞ்சாலியூர் பகுதியில் வசித்து வரும் தப்ரீஸ் என்ற நபர் 10க்கும் மேற்பட்ட தனது நண்பர்களுடன் சென்று நாகராஜ் தரப்பினரிடம் தகராறு செய்துள்ளார். Trending Video: போட்டாபோட்டி ரேசிங்கில் தனியார் பேருந்து.. திண்டுக்கல் - மதுரை வழித்தடத்தில் அடாவடி.!
கத்தியை சுழற்றி மிரட்டல் :
அப்போது கத்தியை சுழற்றி காண்பித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் நாகராஜ், பார்த்திபன், முருகேசன், சூர்யா ஆகியோர் காயமடைந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர் பதிலுக்கு பதில் தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், மொத்தமாக 8 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர்.
கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சம்பவம் :
இதனை தொடர்ந்து இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தகராறு காரணமாக இரண்டு கும்பல் வந்த காரையும் அங்கு விட்டு விட்டு தப்பி ஓடியது. இந்த தகராறு காரணமாக ஆத்திரம் அடைந்த உள்ளூர் மக்கள் காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய சம்பவம் நடந்துள்ளது.