Thoothukudi Minor Girl Murder Attempt Case (Photo Credit: @News18Tamilnadu X / Facebook)

மார்ச் 26, எட்டயபுரம் (Thoothukudi News): தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் (Ettayapuram) பகுதியில் வசித்து வருபவர் இளங்கோவன். இவரின் மனைவி காளியம்மாள். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னதாக தம்பதிகள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்தது. இருவரின் அன்புக்கு அடையாளமாக இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தனர். இதனிடையே, திருமணம் 3 ஆண்டுகளுக்குள், திடீரென கருத்து வேறுபாடு கொண்ட தம்பதிகள் பிரிந்துவிட்டனர்.

மீசை முளைக்காத வயதில் இருந்து காதல்:

இதனால் இரண்டு பெண் குழந்தையுடன் கடந்த 15 ஆண்டுகளாக காளியம்மாள் இராமந்தபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் வசித்து வருகிறார். இதனிடையே, தற்போது காளியம்மாள் மகளுக்கு 17 வயது ஆகிறது. சிறுமி, தான் வசித்து வரும் பகுதியில் இருக்கும் சந்தோஷ் என்ற இளைஞருடன், சிறுவயதில் இருந்து நட்பாக பேசி பழகி வந்துள்ளார். சிறுமிக்கு 14 வயது இருக்கும்போது, அவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறிய சந்தோஷ், சிறுமியை தனது வலையில் வீழ்த்தியதாகவும் தெரியவருகிறது. Taramani College Girl Rape Case: சென்னையில் மீண்டும் பேரதிர்ச்சி.. 16 வயது கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்.! 

ண்ணெண்ணெய் ஊற்றி கொலை முயற்சி:

தற்போது சிறுமிக்கு 17 வயதாகும் நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சந்தோஷ் - சிறுமி காதல் விவகாரம், சிறுமியின் தாய்க்கு தெரியவந்துள்ளது. இதனால் சிறுமியை அவரின் பாட்டி ஊரான தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிறுமி இருந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமியின் பாட்டி ஊருக்கு சென்ற சந்தோஷ், தனது நண்பருடன் சிறுமியின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொலை செய்ய முற்பட்டார். தன்னுடன் சிறுமியை பேச வற்புறுத்தியவர், சிறுமி மறுப்பு தெரிவித்த காரணத்தால் கொலை செய்ய துணிந்த்துள்ளார்.

சிறுமி மருத்துவமனையில் அனுமதி, குற்றவாளிகள் கைது:

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சிறுமியை மீது எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமியின் கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரித்து வரும் அதிகாரிகள், முதற்கட்டமாக சந்தோஷ், அவரின் நண்பர் முத்தையா ஆகியோரை கைது செய்துள்ளனர். சிறுமியின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.