Nannilam Accident (Photo Credit:: @DinesRajR / @SathishKum57422 X)

மார்ச் 18, நன்னிலம் (Tiruvarur News): திருவாரூர் (Tiruvarur Accident Today) மாவட்டத்தில் உள்ள நன்னிலம் (Nannilam) பகுதியில் வசித்து வருபவர் கோகுல் (வயது 20). இவர் விக்கிரபாண்டியம் பகுதியில் செயல்பட்டு வரும் பர்னிச்சர் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு நேர பணிக்கு சென்றார். பின் மீண்டும் இன்று காலையில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். நன்னிலம் - விக்கிரபாண்டியம் சாலையில் கோகுல், தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அவ்வழியே கடலூரில் இருந்து பண்ரூட்டி வழியாக நாகப்பட்டினம் நோக்கி தமிழ்நாடு அரசுப்பேருந்து பயணம் செய்தது. இந்த பேருந்தை முந்திச்செல்ல கோகுல் முயன்றார். அச்சமயம், சாலையோரம் இருந்த நாய்கள், சண்டையிட்டு கோகுலின் இருசக்கர வாகனத்தில் வந்து விழுந்தது. Kattumannarkoil News: செல்போன் பார்க்க தாய் அனுமதிக்காததால் விபரிதம்; 14 வயது சிறுமி தற்கொலை.! 

காவல்துறையினர் விசாரணை:

இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி விழுந்த கோகுலின் மீது, பேருந்தின் சக்கரங்கள் ஏறி இறங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்த விபத்தில், கோகுல் தலைக்கவசம் அணிந்திருந்தபோதிலும், அவரின் உடலில் பேருந்தின் நான்கு சக்கரமும் ஏறி இறங்கியது. இதில் அவர் நிகழ்விடத்திலேயே தலை மற்றும் உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், கோகுலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.