ஏப்ரல் 29, அவிநாசிபாளையம் (Tiruppur News): திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசிபாளையம் பகுதியில், சம்பவத்தன்று இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார். இவர் அதிவேகத்தில் வாகனத்தை இயக்கிய நிலையில், சாலையின் வளைவில் செல்லும்போது வாகனத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ஒருகட்டத்தில் சாலையோரம் சென்ற வாகனம் கம்பிவேலி மீது மோதி விபத்தில் சிக்கியது. Trending Video: கட்சி நிர்வாகிகளுக்கு மதுவுடன் தடபுடல் விருந்து? எம்.எல்.ஏ பெயரில் வைரலாகும் வீடியோ.!
மாணவருக்கு நேர்ந்த சோகம்:
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இவ்விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கல்லூரி மாணவரான அபிஷேக் (வயது 22) மரணித்து உறுதி செய்யப்பட்டது. மேலும், விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் அங்கிருந்த பெட்ரோல் நிலையத்தின் கேமிராவில் பதிவாகி இருந்துள்ளது. இந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
மாணவர் விபத்தில் சிக்கும் பதறவைக்கும் காணொளி:
திருப்பூர் அவிநாசிபாளையம் பகுதியில் அதிவேகமாக பைக்கில் சென்ற கல்லூரி மாணவர் அபிஷேக் (22), வளைவில் திரும்ப முயன்றபோது சாலையோர கம்பி வேலி மீது மோதியதில் பரிதாப மரணம்#Tiruppur | #BikeAccident | #Accident | #CCTV #AccidentCCTV pic.twitter.com/uK5H6E0BMS
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 28, 2025