மே 25, சிவகாசி (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே அம்மாபட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று வெடித்து விபத்து ஏற்பட்டது. ரசாயனம் வைக்கப்பட்டிருந்த தொட்டி திடீரென வெடித்து சிதறியதில் பட்டாசு ஆலை மொத்தமாக தரைமட்டமானது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மக்கள் யாரும் பணிக்கு செல்லவில்லை. வானிலை: இன்று பொளந்துகட்டப்போகும் கனமழை.. அடுத்த 3 மணிநேரத்திற்கு இந்த மாவட்டங்கள் உஷார்.!
10 கிலோமீட்டர் வரை அதிர்வை உணர்ந்த மக்கள் :
சுற்றுவட்டார பகுதிகளில் வெடி சத்தம் கேட்ட நிலையில், மக்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். சிவகாசி தாசில்தார் உட்பட பலரும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பணியில் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. சுமார் 10 கிலோமீட்டர் வரை அதிர்வு உணரப்பட்டு சத்தம் கேட்டுள்ளதாக கூறப்படுவதால், அதிகளவு வெடிகளை சேகரித்து வைத்திருந்தார்களா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் :
#WATCH | Virudhunagar, Tamil Nadu | Explosion occured at a firecracker manufacturing factory near Sivakasi, fire tenders reached the spot and the fire was brought under control pic.twitter.com/QSrms7yoUw
— ANI (@ANI) May 25, 2025