அக்டோபர் 22, நேபாளம் (Social Viral): சிரியா-துருக்கி (Syria Turkey Earthquake) எல்லைப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கம், 50,000-க்கும் அதிகமான உயிர்களை பறித்தது. பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நடுவீதிக்கு வரும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அங்கு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்பதை முன்னதாகவே கணித்த நிலவியல் ஆய்வாளர் ஒருவர், அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் பகுதியிலிருக்கும் டெக்கானிக் தட்டுகளில் நிலநடுக்கம் ஏற்படும் என்றும் தனது முன்னறிவிப்பு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனை மெய்ப்படுத்தம் பொருட்டு கடந்த சில வாரங்களாகவே ஆப்கானிஸ்தான் (Afghanistan Earthquake) பகுதியில் ஏற்படும் பயங்கர நிலநடுக்கங்கள், அங்கு பெரிய சேதத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. 2 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர், இலட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். AQI Delhi: மாசுபாடுகொண்ட காற்றை சுவாசிக்கும் டெல்லி மக்கள்; 300 புள்ளிகளை அதிர்ச்சி.!
ஏற்கனவே பொருளாதார பிரச்சனை உட்பட பல சிக்கல்களில் தவித்து வரும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு, ஐ.நா மனித உணவு உரிமை ஆணையம் தனது தரப்பில் நிதி உதவியை வழங்குவதாகவும் அறிவித்தது. இந்தியா தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், நேபாளத்தில் (Nepal Earthquake) இன்று காலை 07:24 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 5.3 என்ற அளவில் நடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.