ஜனவரி 16, கோட்டா (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா மாவட்டத்தைச் சார்ந்த ஐந்தாம் வகுப்பு பயின்று வரும் சிறுவன் சுரேந்திர பில், தனது வீட்டின் மொட்டை மாடியில் நண்பர்களுடன் பட்டம் விட சென்றுள்ளார். அப்போது இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக பட்டம் விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
சிறுவன் பரிதாப பலி: அச்சமயம், தடை செய்யப்பட்ட கண்ணாடி இழைகளால் தயாரிக்கப்பட்ட மாஞ்சா (Manja Loom) கயிறானது, சிறுவனின் கழுத்தில் சிக்கி அறுத்துள்ளது. இதனால் சிறுவன் தொண்டை அறுபட்டு உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிறுவனின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Midday Sleeping: மதிய நேரம் உறங்குவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
30 பேர் படுகாயம்: இதேபோல, 60 வயதுடைய நபர் ராம்லால் மீனா, இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும்போது மாஞ்சா கயிறு காரணமாக கழுத்து அறுபட்டு படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அவரது கழுத்தில் மட்டும் மருத்துவர்கள் 13 தையல்களை இட்டுள்ளனர். அதேபோல மொத்தமாக பட்டத்தின் மாஞ்சா கயிறு காரணமாக 34 பேர் கோட்டா நகரில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
மாஞ்சா கயிறு மரணங்கள்: ராஜஸ்தான், குஜராத் மாநிலத்தில் லோஹ்ரி அறுவடை திருவிழா கொண்டாட்டத்தின்போது பட்டம்விடுவது வாடிக்கையான ஒன்று. இந்த சமயங்களில் பட்டம் விடுவது தொடர்பாக போட்டிகளும் நடக்கும். போட்டியில் வெற்றிபெற விஷமிகள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கண்ணாடி உட்பட பல பொருட்களை கலவைபோல தயாரித்து படத்தின் கயிற்றில் உபயோகம் செய்வார்கள். இது பல அப்பாவிகளின் உயிரை பறிக்கவும் காரணமாக அமைந்துள்ளது.