Tamilnadu Shocker: சொத்து தகராறில் மாமனாரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகன்; திருப்பூரில் பயங்கரம்.!

6 ஆண்டுகள் சொத்துப் பிரச்சனையில் பேச்சுவார்த்தை இன்றி இருந்த குடும்பத்தினரின், 2 உயிர்கள் இன்று அடுத்தடுத்து பலியான சோகம் திருப்பூரை அதிரவைத்துள்ளது.

Tamilnadu Shocker: சொத்து தகராறில் மாமனாரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகன்; திருப்பூரில் பயங்கரம்.!
Palanisamy & Rajkumar | Gun Fire File Pic (Photo Credit: @NewsTamilTV24x7 X / Pixabay)

செப்டம்பர் 09, காங்கேயம் (Tiruppur News): திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம், கொடுமுடி, எல்லப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பழனிச்சாமி (வயது 70). இவருக்கு அம்பிகா என்ற மகள், ரவிபிரசாத் என்ற மகனும் இருக்கின்றனர். அம்பிகாவுக்கு, படியூரை சேர்ந்த ராஜ்குமார் என்ற நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்கள் இருவரும் தனியே வசித்து வருகிறார்கள். ராஜ்குமார் ஹாலோபிளாக் கம்பெனி நடத்தி வருகிறார்.

மாமனார் - மருமகன் பிரச்சனை:

இதனிடையே, ராஜ்குமார் - பழனிச்சாமி இடையே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக, இருதரப்பும் பேசிக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. ஆனால், குடும்பத்தகராறில் அதிகம் பாதிக்கப்பட்ட ராஜ்குமார், மாமனாரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார். இன்று காலை எல்லப்பாளையத்தில் இருந்து துப்பாக்கியை எடுத்துக்கொண்டு மாமனாரை தேடி மருமகன் வந்துள்ளார். Arakkonam Shocker: பூட்டிய வீட்டில் சடலமாக அம்மா, மகன், மகள்.. அரக்கோணத்தில் சோகம்.. தலைமறைவான கணவர்.! 

துப்பாக்கியால் சாராமரியாக சுட்டுக்கொலை:

மாமனார் பழனிச்சாமி ஆடு-மாடுகளை மேய்த்தபடி வந்த நிலையில், அவரைக்கண்ட ராஜ்குமார் மாமனாரை 5 முறை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொன்று இருக்கிறார். பின் வீட்டிற்கு சென்றவர், மாமனார் பழனிசாமியை கொலை செய்துவிட்டதாக கூறி இருக்கிறார். குடும்பத்தினர் சுதாரிப்பதற்குள், தனது நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து, தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

காவல்துறை விசாரணை:

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காங்கேயம் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த இருவரின் சடலமும் கைப்பற்றப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு சூழ்நிலை உண்டாகி இருக்கிறது. அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சொத்து தகராறில் மாமனார் - மருமகன் உயிர் பலி ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Sep 09, 2024 11:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).